மந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை..!
அமெரிக்க பெடரல் வங்கி 2016ஆம் ஆண்டில் முதல் முறையாக தனது வட்டி விகிதத்தை 0.50 சதவீத்தில் இருந்து 0.25 சதவீதம் உயர்த்தி 0.75 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில் சர்வதேச கடன் சந்தையில் மோசமான வர்த்தக நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தையில் வியாழக்கிழமை வர்த்தகம் துவக்கம் முதலே மிகவும் குறைவான வர்த்தகத்தை பதிவு செய்தது.

இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு மந்தமான வர்த்தகத்தை பதிவு செய்துள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 83.77 புள்ளிகள் சரிந்து 26,519.07 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 28.85 புள்ளிகள் குறைந்து 8,153.60 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications