ஏப்ரல் இல்லை, ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வரும்.. அருண் ஜேட்லி அறிவிப்பு..!

டெல்லி: ஏப்ரல் 1ஆம் தேதி நடைமுறைக்கு வருவதாக இருந்த சரக்கு மற்றும் சேவை வரி ஜூலை 1ஆம் தேதியில் அமலாக்கம் செய்யப்பட்ட உள்ளதாக நிதியமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜிஎஸ்டி வரி விதிப்பை மேலாண்மை செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மத்தியில் இருந்த பிரச்சனை தற்போது முழுமையாகத் தீர்க்கப்பட்ட நிலையில் ஜூலை 1ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி முழுமையாக நடைமுறைக்கு வர உள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய: கிளிக்

மறைமுக வரி

மறைமுக வரி

இந்திய நாட்டின் மறைமுக வரி விதிப்பில் புதிய மாற்றங்களைக் கொண்டு வரத் திட்டமிட்ட மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை வடிவமைத்தது.

பல வருடங்களாக இப்போ வருகிறது, அப்போ வருகிறது என அதிர்வுகளைக் கிளப்பி வந்த மத்திய அரசு, அருண் ஜேட்லி தலைமையிலான நிதியமைச்சகம் ஜிஎஸ்டி வரி விதிப்பை வடிவமைப்பை துரிதமுறையில் நடத்தியது மட்டும் அல்லாமல் அமலாக்கம் செய்வதற்கான பணிகளையும் விரைவாக நடத்தி முடித்துள்ளது.

 

காலத் தாமதம்

காலத் தாமதம்

ஜிஎஸ்டி வரி விதிப்பின் நிர்வாகம் மேலாண்மை குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் மத்தியில் இருந்த இடர்பாடுகள் தற்போது தீர்க்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட முடிவு செய்ப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில்

ஜிஎஸ்டி கவுன்சில்

ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு ஜூலை 1ஆம் தேதியே சரியாக இருக்கும், மேலும் இது பரிமாற்ற வரி என்பதால் எந்த நேரத்தில் அமலாக்கம் செய்யலாம் என ஜிஎஸ்டி அமைப்பின் 9வது கூட்டத்தின் முடிவில் தெரிவித்தார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி.

மத்திய மற்றும் மாநில அரசுகள்

மத்திய மற்றும் மாநில அரசுகள்

மேலும் ஜிஎஸ்டி அமைப்பின் 9வது கூட்டத்தில், விரி விதிப்பு குறித்த ஆய்வுகளை நடத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் முக்கியப் பங்கீடுகளைச் செய்துள்ளது.

வருடத்திற்கு 1.5 கோடி ரூபாய் மற்றும் அதற்குக் குறைவான விற்றுமுதல் (Turnover) இருக்கும் வரிக் கணக்குகளில் 90 சதவீத கணக்குளை மாநில அரசு ஆய்வு செய்யலாம். 1.5 கோடி ரூபாய்க்கு அதிகமான விற்றுமுதல் இருக்கும் கணக்குகளை 50:50 மத்திய மற்றும் மாநில அரசுகள் பிரித்துக்கொள்ளும்.

 

ஆய்வுக்குழு

ஆய்வுக்குழு

மேலும் வரி கணக்கின் ஆய்வுக் குழுவில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரிகள் இருக்க வேண்டும் எனவும் ஜிஎஸ்டி அமைப்பின் 9வது கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கணினி உதவி

கணினி உதவி

மேலும் ஆய்வுகள் அனைத்தும் கணினி மென்பொருள் உதவியுடன் ஆய்வு செய்யப்படும் எனவும், ஒரு கணக்கை ஒரு அமைப்பு (மத்திய அல்லது மாநில அரசு அதிகாரிகள்) மட்டுமே ஆய்வு செய்யவேண்டும் எனவும் ஜேட்லி இக்கூட்டத்தில் கூறியுள்ளார்.

இதற்கு அனைத்து மாநில அரசுகளும் ஒப்புக்கொண்ட நிலையில் மேற்கு வங்காளம் மட்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.

 

மேற்கு வங்காளம்

மேற்கு வங்காளம்

1.5 கோடி ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் அனைத்துக் கணக்குகளையும் மாநில அரசு மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரிக்கையை வைத்துள்ளது மேற்கு வங்காளம். இதில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு முழுமையாகத் தெரிவில்லை.

கடல் சார்ந்த வர்த்தகம்

கடல் சார்ந்த வர்த்தகம்

12 நாட்டிகல் மையில் வரையிலான கடல் சார்ந்த வர்த்தகத்திற்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வாயிலாக வரி விதிக்கும் எனவும், மாநில அரசு அதன் பொருளாதார நடவடிக்கையின் மூலம் சந்தையில் வரியை வசூலித்துக்கொள்ளலாம் எனவும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

 

 

அடுத்தக் கூட்டம்

அடுத்தக் கூட்டம்

மேலும் ஜிஎஸ்டி அமைப்பின் அடுத்தக் கூட்டம் பிப்ரவரி 18ஆம் தேதி நடக்க உள்ளது.

இக்கூட்டத்தில் மத்திய, மாநில, IGST அமைப்பு மற்றும் இழப்பீடு ஆகியவற்றைக் குறித்து இறுதி முடிவுகளை எடுக்க உள்ளது. அதன்பின் மாநில அரசுகள் மத்தியில் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+