டொனால்டு டிரம்ப் பதவியேற்பு: சென்செக்ஸ் 274 புள்ளிகள் சரிவு..!
இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்த நிலையில் ஆக்சிஸ் வங்கியின் காலாண்டு முடிவு வங்கித்துறை பங்குகளை கணிசமாகப் பாதித்தது.
மேலும் அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்குப் பதவியேற்க உள்ளதால் இந்திய பங்குச்சந்தை மளமளவெனச் சரிந்தது.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 274.10 புள்ளிகளை இழந்து 27,034.50 புள்ளிகளை அடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 85.75 புள்ளிகள் சரிந்து 8,349.35 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.



Click it and Unblock the Notifications