இந்தியாவில் நேரடி வரி விதிப்பின் கீழ் இருக்கும் சேவை வரி, ஜிஎஸ்டிக்கு இணையாக 18 சதவீத வரை 2017-18ஆம் பட்ஜெட் அறிக்கையில் உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது.
தற்போது உணவகங்கள், விமான டிக்கெட், ஆன்லைன் சேவைகள் என அனைத்திலும் வசூலிக்கப்படும் 15 சதவீத சேவை வரி, பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உள்ள பட்ஜெட் அறிக்கையில் 18 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் நுகர்வோர் சந்தையில் மக்கள் அனைத்து சேவைகளுக்கும் அதிகவிலான செலுத்த வேண்டியிருக்கும்.

ஆனால் அனைத்துச் சேவைகளுக்கு 18 சதவீதம் விதிக்கப்படுமா என்பது தற்போதைய நிலையில் சந்தேகமே என்பதால், மறைமுக வரியை முழுமையாகக் களைத்து ஜிஎஸ்டி உருவாக்கப்பட்டுள்ள நிலையில், ஜிஎஸ்டி-ஐ போலவே சேவைத்துறையிலும், 4 அளவீடுகள் கொண்ட வரி விதிக்கப்படுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.
பட்ஜெட் 2017 குறித்த அனைத்துச் செய்திகளையும் படிக்க இதைக் கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications