திங்கட்கிழமையைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமையும் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு உயர்ந்துள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் அறிக்கை இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகவும் சாதகமாக இருக்கும் எனச் சந்தையில் நம்பிக்கை அதிகரித்துள்ளதின் காரணமாக, சந்தையில் முதலீட்டு அளவுகள் அதிகரித்துக் காணப்படுகிறது.
இன்றைய வர்த்தகத்தில் வங்கித்துறையில் அதிகளவிலான முதலீடு குவிந்துள்ளது, குறிப்பாக நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கியில் முதலீட்டு அதிகமாகச் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பட்ஜெட் தாக்கல் செய்வதற்குத் தேர்தல் ஆணையத்தின் அனுமதி முதலீட்டுச் சந்தையில் மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 258.24 புள்ளிகள் உயர்ந்து 27,375.58 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 84.30 புள்ளிகள் உயர்ந்து 8,475.80 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டங்கள் இந்திய ஐடி நிறுவனங்களைப் பாதிக்கும் வண்ணமாக உள்ளதால், இன்றைய வர்த்தகத்தில் ஐடி நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் சரிந்தது.


Click it and Unblock the Notifications