எச்டிஎப்சி வங்கியின் லாப அளவுகள் உயர்ந்ததை அடுத்து இந்திய வங்கித் துறை சார்ந்த பங்குகளில் இன்று முதலீட்டு அளவுகள் தொடர்ந்து அதிகரித்தது.
இதன் வாயிலாக வர்த்தகத் துவக்கம் முதல் தொடர்ந்து உயர்வு நிலையில் இருந்த காரணத்தால் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 350 புள்ளிகள் வரை உயர்ந்து காணப்பட்டது.
மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்யா, சீனா, போன்ற முக்கியத் தலைவர்கள் இருக்கும் நிலையில், இந்திய பிரதமருக்கு முதல்முதலாக இரு நாடுகளுக்கு மத்தியில் இருக்கும் நட்புறவு மற்றும் வர்த்தகத் தொடர்புகள் குறித்துத் தொலைப்பேசி வாயிலாகப் பேசினார். இதனால் அன்னிய முதலீட்டாளர்கள் மத்தியிலும் இந்திய சந்தையில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் அதிரித்தது.
இந்நிலையில் புதன்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 332.56 புள்ளிகள் உயர்ந்து 27,708.14 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 126.95 புள்ளிகள் உயர்ந்து 8,602.75 புள்ளிகள் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications