மத்திய அரசின் 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் வர்த்தகச் சந்தையை மிகப்பெரிய அளவிலான வளர்ச்சி அடையச் செய்யும் என நம்பிக்கை பிறந்துள்ள நிலையில் மும்பை பங்குச்சந்தையில் முதலீடு கடந்த 3 நாட்களாகக் குவிந்து வருகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர் முதலீடு செய்த காரணத்தால், சென்செக்ஸ் குறியீடு 3 மாத உயர்வை எட்டியது.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 174.32 புள்ளிகள் உயர்ந்து 27,882.46 புள்ளிகளை அடைந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடு 38.50 புள்ளிகள் உயர்ந்து 8,641.25 புள்ளிகளை அடைந்து இந்த வாரத்தின் வர்த்தகம் முடிவடைந்தது.
மேலும் இன்று பிப்ரவரி மாதத்திற்கான ஆர்டர்கள் முதலீட்டுக்காகத் திறக்கப்பட்ட நிலையில் முதலீட்டாளர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications