கிளிக் செய்தால் பணம்.. 7 லட்சம் பேரை ஏமாற்றி ரூ.3,700 கோடி 'மோசடி'..!

உத்திர பிரதேச மாநிலத்தின் நொய்டாவை சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த மோசடியைச் செய்துள்ளது. நீங்களும் இத்தகைய வியாபாரத்தை பற்றி கேட்டிருப்பீர்கள்..

நொய்டா: இணையமும், தொழில்நுட்பமும் மனிதனின் வாழ்க்கையை எளிமையாக மட்டுமே என்றாலும் அதன் வளர்ச்சியால் மக்கள் தினமும் புதியப்புதிய பிரச்சனைகளையும் மோசடிகளையும் சந்தித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன் கால் சென்சர் மோசடி இந்திய மக்களை அதிரவைத்த நிலையில் தற்போது இணைய வர்த்தக மோசடி மூலம் 6.5 லட்சம் பேர் தங்களது பணத்தை இழந்துள்ளனர்.

இணையப் பக்கத்தை (Web Page) கிளிக் செய்தால் பணம் கிடைக்கும் என நொய்டாவை சேர்ந்த ஒரு நிறுவனம் சுமார் 6.5 லட்சம் பேரை ஏமாற்று சுமார் 3,700 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளனர்.

உத்திர பிரதேச மாநிலத்தின் நொய்டாவை சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த மோசடியைச் செய்துள்ளதை தனிப் படை பிரிவு போலீஸார் கண்டுபிடித்து இந்த மோசடி கும்பலை கைது செய்துள்ளனர்.

நொய்டா

நொய்டா

நொய்டா செக்டார் 63 பகுதியில் இயங்கி வரும் அபலேஸ் இன்போ சொல்யூஷன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் வெறும் இணையப் பக்கத்தைக் கிளிக் செய்தாலே பணச் சம்பாதிக்க முடியும் என மக்கள் நம்பவைத்து சுமார் 3,700 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது.

தற்போது இந்த மோசடிக்குத் தொடர்புடைய 3பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 

வங்கி கணக்கு முடக்கம்

வங்கி கணக்கு முடக்கம்

மோசடி செய்த அபலேஸ் இன்போ சொல்யூஷன்ஸ் லிமிடெட் (Ablaze Info Solutions Limited) நிறுவனத்தின் தலைவர் அபினவ் மிட்டல், சீஓஓ ஸ்ரீதர் பிரசாத், தொழில்நுட்ப தலைவர் மகேஷ் தயா ஆகியோரை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர்.

மேலும் இந்நிறுவனத்தின் வங்கி கணக்கையும் முடக்கப்பட்டுள்ளது. இவ்வங்கி கணக்கில் சுமார் 500 கோடி ரூபாய் தற்போது உள்ளது.

 

பல வங்கி பல கணக்கு

பல வங்கி பல கணக்கு

இந்நிறுவனத்திற்குச் சொந்தமாகப் பல வங்கிகளில் பல கணக்குகள் உள்ளதை இந்நிறுவனத்தின் அலுவலகத்தில் சோதனை செய்தபோது கண்டுப்பிடக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி குறித்து உத்திர பிரதேச மாநிலத்தின் தனிப் படைப் பிரிவு போலீஸார் அமலாக்கத் துறை, செபி, மற்றும் ரிசர்வ் வங்கிக்குத் தகவல் அளித்துள்ளனர்.

பேஸ்புக் தலைவர்..

பேஸ்புக் தலைவர்..

இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், தான் இந்தியாவில் மார்க் ஜூக்கர்பெர்க் என்றும், புதிய வாடிக்கையாளர்களைக் கவர தனியான சமுக வளைதளைத்தையும் உருவாக்கியுள்ளார் என்றும் கூறினார்.

மேலும் தான் விரைவில் தனியார் வங்கி ஒன்றைத் துவங்க உள்ளதாகவும் இதன் மூலம் தற்போது இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகச் சேவை அளிக்க உள்ளதாகவும் இந்நிறுவனம் மற்றும் அதன் தலைவர் மிட்டல் கூறியதாகத் தெரிவித்துள்ளனர்.

 

கிளிக் செய்தால் பணம்

கிளிக் செய்தால் பணம்

இந்நிறுவனம் அளிக்கும் இணையப் பக்கத்தைக் கிளிக் செய்தால் பணம் கிடைக்கும் என ஏமாற்றி இதுவரை 3,700 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் 524 கோடி ரூபாய் மதிப்பிலான பரிமாற்றத்தை முழுமையாக முடக்கவும் போலீஸார் வங்கி அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

 

வர்த்தக வளர்ச்சி

வர்த்தக வளர்ச்சி

இந்நிறுவனம் 2011ஆம் ஆண்டுத் துவங்கியபோது வெறும் 1 லட்சம் ரூபாய் அளவிலான வர்த்தகத்தை மட்டுமே செய்துவந்த நிலையில், 2012-2016 ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் அபலேஸ் இன்போ சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் வர்த்தகம் 1.5 லட்சத்தில் இருந்து 3,700 கோடி ரூபாய் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.

6.5 லட்சம் பேர்

6.5 லட்சம் பேர்

இந்த வர்த்தகத்தைக் கொண்டு இந்நிறுவனம் சுமார் 6.5 லட்சம் பேரை ஏமாற்றியுள்ளது. மேலும் ஒரு கிளிக்கிற்கு 5 ரூபாய் என்ற அளவில் அதன் வாடிக்கையாளர்களுக்குப் பணம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

சோசியல் டிரேட்

சோசியல் டிரேட்

சோசியல்டிரேட்.பிஸ் என்ற இணையத்தை இந்நிறுவனம் துவங்கியுள்ளது. இந்நிறுவனத்தில் சேர வேண்டும் என்றால் 5,750 ரூபாயில் இருந்து 57,500 ரூபாய் வரை பணம் செலுத்த வேண்டுமாம். ஒவ்வொரு வாடிக்கையாளரும் தாங்கள் செய்யும் கிளிக்கிற்கு 5 ரூபாய் வீதம் அளிக்கப்படுவதாக இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்துள்ளது.

பெயர் மாற்றம்

பெயர் மாற்றம்

இந்த மோசடிகள் மூலம் போலிஸிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க இந்த நிறுவனம் இணையதளத்தின் பெயரை தொடர்ந்து மாற்றி வந்துள்ளது. மேலும் இதேப்போன்று aresocialtrade.biz,freehub.com,intmaart.com,frenzzup.com, 3W.com பெயர் கொண்ட நிறுவனங்கள் மோசடி செய்து வருவதாகவும் உத்திர பிரதேச போலீஸார் தெரிவித்துள்ளனர்.

புகைப்படம்: தி இந்து

மோசடி செய்தாலும் ராஜ வாழ்க்கை

மோசடி செய்தாலும் ராஜ வாழ்க்கை

இந்நிறுவன தலைவர் மோசடி செய்த பணத்தில் ஆடம்பர வீடு, கார் என் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர். 5 நட்சத்திர ஹோட்டலில் பார்ட்டி, பல முறை முக்கிய வாடிக்கையாளர்களைச் சந்திக்க ஆஸ்திரேலியா பயணம் எனப் பல வேலைகளைச் செய்துள்ளதாகத் தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த நிறுவனத்திற்கு யார் முக்கிய வாடிக்கையாளர்கள் தெரியுமா..?

இந்த நிறுவனத்திற்கு யார் முக்கிய வாடிக்கையாளர்கள் தெரியுமா..?

பொதுவாக இதுபோன்ற மோசடிகளில் சிக்குவோர் சரியான புரிதல் மற்றும் படிப்பறிவு இல்லாதோர் அதிமாகமான சிக்குவார்கள். ஆனால் இங்கு அதிசயம் பல மென்பொருள் துறை சார்ந்த ஊழியர்கள், மீடியா, மருத்துவர்கள் எனப் படித்தப்பட்டதாரிகள் அதிகளவிலானோ ஏமார்ந்து போயுள்ளனர்.

நம்பிக்கை

நம்பிக்கை

முதலில் வாடிக்கையாளர் செலுத்தும் பணத்தில் சில பகுதியைத் திரும்பவும் அவர்களுக்கே அளிக்கப்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மத்தியில் இத்தகைய நிறுவனங்கள் மத்தியில் அதிகளவிலான நம்பிக்கை பெறுகிறது.

மேலும் இந்தப் பரிமாற்றம் அனைத்தும் மின்னணு முறையில் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

 

கால் சென்டர் மோசடி..

கால் சென்டர் மோசடி..

 

 

'மோசடி மன்னன்'

'மோசடி மன்னன்'

 

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+