5 லட்சத்திற்கும் அதிகமாகச் செலவு செய்து திருமணம் செய்கிறீர்கள் என்றால் ஏழைப் பெண்களுக்கு பங்களிக்க வேண்டும் என்பது போன்ற சட்டம் நிறைவேற்றப்பட இருக்கின்றது.
டெல்லி: மக்களவையில் விரைவில் உங்கள் திருமணத்திற்கு எவ்வளவு விருந்தினர்கள் வர வேண்டும், என்ன உணவு வகைகள் செய்ய வேண்டும், எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதற்கு எல்லாம் கடிவாளம் போட இருக்கின்றது.
5 லட்சத்திற்கும் அதிகமாகச் செலவு செய்து திருமணம் செய்கிறீர்கள் என்றால் ஏழைப் பெண்களுக்கு பங்களிக்க வேண்டும் என்பது போன்ற சட்டம் நிறைவேற்றப்பட இருக்கின்றது.
5 லட்சம் உச்ச வரம்பு
உங்கள் திருமணத்திற்கு 5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நீங்கள் செலவு செய்கிறீர்கள் என்றால் 10 சதவீதம் வரை ஏழைப் பெண்களுக்கு உதவ வேண்டும் என்ற மசோதாவை காங்கிரஸ் எம்பி ரஞ்சித் மனைவியும் எம்பியுமான பப்பு யாதவ் அறிமுகம் செய்துள்ளார்.
காரணம்
திருமண (கட்டாய பதிவு மற்றும் வீண்செலவு தடுப்பு) மசோதா 2016 தனியார் உறுப்பினர் மசோதாவாக மக்களவையில் ஏற்றுக்கொண்டு விவாதிக்க இருக்கின்றது.
இந்த மசோதா எடுத்துவருவதற்கான முக்கிய காரணமாக திருமணத்தில் செய்யும் தேவையில்லாத செலவுகளை குறைக்க வைத்து எளிமையாகச் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே என்று எம்பி ரஞ்சித் கூறுகின்றார்.
பெரிய நடவடிக்கை
திருமணம் என்றால் இரண்டு தனிநபர்களுக்கானது, ஆனால் இன்றோ பெரும் அளவில் செலவு செய்வதினால் ஏழை பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகின்றது, சமுகத்தையும் பாதிக்கின்றது.
இதை நாம் கண்டிப்பாக சமுகத்திற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பப்பு யாதவ் கூறுகின்றார்.
இந்த மசோதாவில் அப்படி என்ன தான் புதுமை..?
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் புதிதாக திருமணம் செய்பவர்கள் 5 லட்சத்திற்கும் அதிகமாகச் செலவு செய்யும் போது 10 சதவீதம் வரை ஏழைப் பெண்களுக்கு உதவுவதற்காக அரசிற்குச் செலுத்த வேண்டும்.
அது மட்டும் இல்லாமல் திருமணம் முடிந்த 60 நாட்களில் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.
விருந்தினர்களுக்கும் கட்டுப்பாடு
திருமணத்திற்கு எவ்வளவு விருந்தினர்கள் வர வேண்டும், என்ன உணவு வழங்கப்பட வேண்டும் போன்ற வற்றுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட இருக்கின்றது. இது எதற்கு என்ற கேள்விக்கு உணவுப் பொருட்கள் வீணாக்குவது குறையும் என்று கூறுகின்றனர்.
ஆடம்பர எம்பி
பப்பு யாதவ் சொல்வது சரி என்று வைத்துக்கொள்வோம், இந்த எம்பி பாராளுமன்றத்திற்கு வரும் பைக்கின் விலையே 15 லட்சம் தாண்டும். அப்படிப்பட்ட ஆடம்பர எம்பி இப்படி ஒரு சட்டத்தை எடுத்து வருவதை வரவேற்பதுடன், இவரும் இது போன்ற செலவுகளைக் குறைத்து ஏழை மக்களுக்கு உதவினால் நன்மை பயக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications