167 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!
ரிசர்வ் வங்கி, எச்டிஎப்சி வங்கியின் அன்னிய முதலீட்டுக்கான கட்டுப்பாடுகளை நீக்கிய நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் எச்டிஎப்சி வங்கிப் பங்குகள் 9 சதவீதம் வரை உயர்ந்தது.
இதன் மூலம் பிற வங்கிப் பங்குகளிலும் அதிகளவிலான முதலீடு காணப்பட்டது, மேலும் இன்று முதலீட்டாளர்கள்ஷ ஐடி, டெலிகாம், மெட்டல் மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் அதிகளவிலான முதலீடு செய்திருந்த காரணத்தால் வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை தொடர்ந்து உயர்ந்த நிலையிலேயே காணப்பட்டது.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 167.48 புள்ளிகள் உயர்ந்து, 28,468.75 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 43.70 புள்ளிகள் உயர்ந்து 8,821.70 புள்ளிகளை எட்டி இந்த வாரத்தின் வர்த்தகம் முடிவடைந்தது.



Click it and Unblock the Notifications