ஆதார் பையோமெட்ரிக் தகவல்களை பயன்படுத்தி பான் கார்டு பெற புதிய செயலி: வருமான வரித் துறை வெளியீடு..!
வருமான வரித்துறை வரி செலுத்த மற்றும் திரும்பப் பெறக்கூடிய தொகையைக் கண்டறிய புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது புதிதாக அதில் ஆதார் அட்டையின் பையோமெட்ரிக் தரவுகளைப் பயன்படுத்தி எளிதாகப் பான் கார்டு பெறும் சேவையை அறிமுகப்படுத்த இருக்கின்றது.
வருமான வரித் துறை நிரந்தரக் கணக்கு எண் (பான்) என்னை உடனுக்குடன் அளிக்கும் விதமாக ஆதார் எண் பயன்படுத்தி இந்தச் சேவையை உருவாக்கி வருகின்றது.
அமைச்சர் கருத்து
இதற்கான திட்டம் துவக்க நிலையில் தான் உள்ளது என்று மாநிலங்களின் நிதி அமைச்சரான சந்தோஷ் குமார் கங்வார் மக்களவயில் வெள்ளிக்கிழமை எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
வரி செலுத்துவதற்கு உருவாக்கப்பட்ட செயலி
இந்த மொபைல் செயலி வரி செலுத்துவதற்காக மட்டும்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் செயலி மூலம் வரி செலுத்த மற்றும் திரும்பப் பெறக்கூடிய தொகையைக் கண்டறிய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
எம்சிஏ போர்ட்டலில் பான் விண்ணப்பத்திற்கான ரசீது உருவாக்கப்பட்ட உடன் நான்கு மணி நேரத்தில் பான் எண் அளிக்கப்படும்.
இது தவிர வரித் துறை இணையதளப் பான் விண்ணப்பத்திற்கும் ஆதார் எண் மின்னணு கையெழுத்துப் பயன்படுத்திப் பான் கார்டு முறையை என்எஸ்டிஎல் மூலமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
பேப்பர் இல்லாமல் பான் கார்டு பெறுவது எப்படி
பேப்பர் விண்ணப்பம் ஏதும் இல்லாமல் முழுவதும் இணையதளம் மூலமாகவே ஆதார் அட்டைப் பயன்படுத்தி அதில் உள்ள படங்கள், கையெழுத்து அன அனைத்தையும் வைத்து பான் கார்டு பெற முடியும் என்று கங்வார் தெரிவித்துள்ளார்.
ஆதார் பயன்படுத்தி மின்னணு மூலமாக அனைத்துத் தனிநபர்களும் ஆதார் அட்டைக்கு அளித்த கைரேகைப்பதிவை உள்ளிட்டு பான் எண்ணிற்கு விண்ணப்பிக்க முடியும்.
ஆதார் கார்டு
இதுவரை 111 கோடி பேருக்கு ஆதார் எண் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதனைப் பயன்படுத்திப் புதுச் சிம் கார்டு, வங்கி கணக்கு, மற்றும் ஆதார் கணக்கு இணைக்கப்பட்ட வங்கி கணக்கிற்குப் பணம் அனுபவத்து போன்றவற்றைச் செய்யலாம்.
பான் கார்டு விண்ணப்பிப்பவர் மற்றும் வைத்துள்ளவர்கள் எத்தனை பேர்?
அரசின் கணக்கின் படி 2.5 கோடி பேர் ஒவ்வொரு வருடமும் பான் எண்ணிற்கு விண்ணப்பிப்பதாகவும், 25 கோடி பேர் பான் கார்டு வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications