இந்தியாவில் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்தால் உங்களுக்கு 26 வாரம் பெற்றோர் விடுப்பு கிடைக்கும்..!
அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் ஐகே இந்தியா நிறுவனம் தங்களது ஊழியர்களுக்குத் தங்களது நிறுவனம் விடுமுறை கொள்கையில் புதிய பெற்றோர் விடுப்பு கொள்கையை அறிமுகப்படுத்தியது.
இதனை அடுத்து இந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் ஆண், பெண் என்று அனைவருக்கும் 6 மாதங்கள் சம்பளத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
பெண்களுக்குக் கூடுதல் விடுமுறை
கூடுதலாகப் பெண் ஊழியர்களுக்கும் 16 வாரங்கள் கூடுதலாக 50 சதவீத பணி நேரத்தையும் குறித்துள்ளது இந்த ஹெவிவெயிட் ஸ்வீடிஷ் அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம்.
ஐகே இந்தியா நிறுவனத்தின் மேலாளர் அண்ணா-கேரின் மான்ஷன் இந்தச் செய்தியை இந்தியாவில் உள்ள எங்களது ஊழியர்கள், ஸ்டோர் திறக்க இருப்பவர்கள் என அனைவருக்கும் அறிவிப்பதில் பெருமை படுகின்றேன் என்று கூறியுள்ளார்.
சம வாய்ப்பு
மேலும் அவர் கூறுகையில் சக தொழிலாளர்கள் அதிகாரம் மற்றும் சம வாய்ப்பு போன்றவற்றைச் சரிக்கும் சமமாக அனைத்து ஊழியர்களுக்கு வழங்க நிறுவனம் முடிவுசெய்துள்ளது என்றும் தெரிவித்தார்.
குழந்தை தத்து எடுப்பவர்களுக்கும் இதே கொள்கை
இந்தப் புதிய பெற்றோர் விடுமுறை கொள்கை ஒற்றைப் பெற்றோர் மற்றும் குழந்தை தத்து எடுப்பவர்கள் என அனைவருக்கும் பொருந்து என்று கூறினார்.
பெண்களுக்கு வேலை நேரம் குறைப்பு
பெண் ஊழியர்கள் பெறக்கூடிய கூடுதல் வேலை நேரக் குறைப்பு மட்டும் இல்லாமல் கருத்தடை சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள் என்றால் அதற்கும் 2 வாரங்கள் கூடுதல் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கப்படுமாம்.
கர்ப்பகாலச் சிக்கலின் போது
அதுமட்டும் இல்லாமல் கற்பக் குறைபாடுகளால் உடல் நலக் குறைவு, முன்கூடிய குழந்தை பிறக்கும் போது ஏற்படும் சிக்கல் போன்றவற்றின் போது ஒரு மாதம் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கப்படும்.
பாலினச் சமநிலை
50/50 பாலினச் சமநிலையுடன் அதன் பலன்களை அனுபவிக்க ஐகே இந்தக் கொள்கையை உருவாக்கியுள்ளது. குழந்தைகளைப் பகல் நேரத்தில் பார்த்துக்கொள்ள ஏற்பாடு, குடும்பத்துடன் நீண்ட கால நிறுவனத்தில் பணிபுரிய பல நடவடிக்கைகளை இந்த நிறுவனம் எடுத்துள்ளது.
பாராளுமன்றத்தில் ‘மகப்பேறு உதவி மசோதா’
வேலை செய்யும் பெண்களுக்கான மகப்பேறு நன்மை மசோதா 2016-ஐ அன்மையில் பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக இயற்றப்பட்டு முதல் இரண்டு குழந்தைகளுக்கு 12 வாரங்களாக இருந்த விடுமுறை காலம் 26 வாரங்களாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கதும் மேலும் முழு விவரங்களுக்கு இங்குக் கிளிக் செய்யவும்.
More From GoodReturns

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!



Click it and Unblock the Notifications