டெல்லி: இந்தியாவில் மறைமுக வரி விதிப்பை முழுமையாக மாற்றியமைக்கும் மிகப்பெரிய சீர்திருத்தமான சரக்கு மற்றும் சேவை வரியின் அமலாக்கத்திற்கான 4 முக்கிய மசோதாக்கள் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்புதல் மூலம் திட்டமிட்டபடி ஜூலை மாத்தில் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்படும்.
நாடாளுமன்றம்
மேலும் இந்த 4 மசோதாக்கள், இறுதி ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும், மேலும் மாநிலங்களுக்கான தனி ஜிஎஸ்டி மசோதா மாநில அவையில் ஒப்புதலுக்காக இந்த வாரத்திற்குள் கொண்டு வரப்பட உள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில்
ஜிஎஸ்டி அமைப்பு (GST Council) ஏற்கனவே உருவாக்கப்பட்ட 5 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் சென்டரல் ஜிஎஸ்டி, இன்டிகிரேடெட் ஜிஎஸ்டி, ஸ்டேட் ஜிஎஸ்டி, யூனியன் டெரிடெரி ஜிஎஸ்டி மற்றும் மாநிலங்களுக்கு ஏற்படும் நட்டத்தை எப்படி மத்திய அரசு ஈடு செய்யும் என்பதற்கான விதிமுறைகளையும் ஜிஎஸ்டி அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
வரி விதிப்புகள்
தற்போதைய நிலையில், ஜிஎஸ்டியின் கீழ் 5, 12, 18, 28 என்ற நான்கு வரி விதிப்புகளும், கார், காற்றேட்டப்பட்ட பானங்கள் மற்றும் புகையிலை ஆகிய பொருட்களுக்கு மாநில வரி வருவாய் இழப்புகளை ஈடு செய்யும் வகையில் கூடுதல் வரி விதிப்புகளை முதல் 5 வருடங்களுக்கு விதிக்கப்பட உள்ளது.
பொருளாதார வளர்ச்சி
இந்தியா 1947ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்த பின்பு இந்தியாவில் ஏற்படும் மிகப்பெரிய வரி சீர்திருத்த நடவடிக்கை இது.
ஆகையால் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் இந்தியாவில் நிறுவனங்களின் வர்த்தக வாய்ப்புகள் மிகப்பெரிய அளவில் உயரும் காரணத்தால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஜிஎஸ்டி வாயிலாக மட்டும் 0.5 சதவீதம் வரை வளர்ச்சி அடையும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications