ரொக்க பண பரிவர்த்தனை வரம்பை 2 லட்சமாக மேலும் குறைத்தது மத்திய அரசு..!
2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக ரொக்கப் பணப் பரிவர்த்தனை செய்தால் சட்டவிரோதமது என்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு பட்ஜெட் 2017-18-ஐ பிப்ரவரி 1-ம் தேதி அருண் ஜெட்லி அவர்கள் வாசித்த போது ரொக்கப் பணப் பரிவர்த்தனை 3 லட்சமாகக் குறைக்கப்படும் என்று அறிவித்தார். இப்போது என்னவென்றால் வருமான வரிச் சட்டத்தில் இரண்டு லட்சமாகக் குறைத்துத் திருத்தம் கொண்டு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அபராதம் எவ்வளவு
3 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகப் பணப் பரிவர்த்தனை செய்யும் போது 100 சதவீத அபராதம் விதிக்கப்படும்.
பணப் பரிவர்த்தனையைக் கண்காணிக்கும் அரசு
பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு வருவாய் செயலாளர் ஹஸ்முக் ஆதியா செய்தியாளர்களைச் சந்தித்த போது ரொக்கப் பணமாகப் பரிவர்த்தனை செய்வதை அரசு தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், எந்தத் துறையில் பணப் பரிவர்த்தனை அதிகமாக நடைபெறுகின்றது என்றும் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகின்றது
பாண் எண் கட்டாயம்
முன்னதாக 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகப் பணப் பரிவர்த்தனை செய்யும் போது நிரந்தரக் கணக்கு எண் அல்லது வருமான வரி அடையாள விவரங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயம் என மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.
எப்போது முதல் இந்த வரம்பு அமலுக்கு வருகின்றது
ரொக்கப் பணப் பரிவர்த்தனைக்கான இந்த வரம்பு வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
எதற்காக இந்த வரம்பு
இந்தத் திட்டத்தின் மூலம் கருப்புப் பணத்தைக் குறைத்து அனைவரையும் டிஜிட்டல் பரிவர்த்தனை நோக்கி நாட்டை வழிநடத்தும் முயற்சி என்று கூறுகின்றனர்.
யாருக்கெல்லாம் விலக்கு
எனினும் இந்த வரம்புகள் அரசுத் துறை நிறுவனங்கள், வங்கி நிறுவனங்கள், தபால் அலுவலகச் சேமிப்பு கணக்கு, கூட்டுறவு வங்கிகளுக்குப் பொருந்தாது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications