எண்ணெய் மற்றும் எரி வாயு நிறுவனங்களால் சென்செக்ஸ் 164 புள்ளிகள் உயர்வு..!
உள்நாட்டுப் பங்குகள் வியாழக்கிழமை நன்கு உயர்ந்தன, தேசிய பங்குச் சந்தையான நிப்டி இன்று 0.62 சதவீதம் அதாவது 55.85 சதவீதம் உயர்ந்து 9,086.30 புள்ளிகளாகவும், மும்பை பங்குச் சந்தையான 0.56 சதவீதம் அதாவது 164.48 புள்ளிகள் உயர்ந்து 29,332.16 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.

மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் பொருத்த வரை எண்ணெய் மற்றும் எரி வாயு நிறுவனங்களின் பங்குகள் சராசரியாக 1.21 சதவீதம் உயர்ந்தன. அதே நேரம் பவர் நிறுவனப் பங்குகள் 1.2 சதவீதமும், உலோக நிறுவனப் பங்குகள் 1.08 சதவீதமும், உயர்ந்தன. நுகர்பொருட்கள் சந்தைப் பங்குகள் மட்டும் 0.1 சதவீதம் சரிந்து வர்த்தகம் செய்யப்பட்டது.
இன்று அதிக லாபம் அளித்த பங்குகள் என்றால் டாடா மோட்டார்ஸ் (+ 2.59%), கெயில் (+ 2.39%), என்டிபிசி (+ 2.27%), விப்ரோ (+ 1.6%) மற்றும் லூபின் (+ 1.58%) ஆகும்
அதே நேரம் நட்டம் அடைந்த பங்குகள் என்றால் டிசிஎஸ் (-0.81%), ஐடிசி (-0.66%), பார்தி ஏர்டெல் (-0.35%), எச்யூஎல் (-0.32%), ஹெச்டிஎப்சி வங்கி (-0.04%) ஆகும்.


Click it and Unblock the Notifications