ஏப்ரல் முதல் வாகனம் மற்றும் சுகாதார இன்சூரன்ஸ் காப்பீடு பிரீமியம் விலை உயர வாய்ப்பு..!

ஏப்ரல் முதல் வாகனம் மற்றும் சுகாதார இன்சூரன்ஸ் காப்பீடு பிரீமியம் விலை உயர வாய்ப்பு..!

நான்கு சக்கர வாகனம். இரண்டு சக்கர வாகனம் மற்றும் சுகாதாரக் காப்பீடு பிரீமியம் விலை ஏப்ரல் 1 முதல் உயர வாய்ப்புள்ளது, இதற்காகக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) காப்பீட்டு நிறுவனங்களுக்கான முகவர்களின் கமிஷன் உள்ளிட்டவற்றில் திருத்தம் செய்ய அனுமதித்துள்ளது.

காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அனுமதி அளித்ததை அடுத்து 5 சதவீதம் வரை பழைட்ய பிரீமியம் விலையில் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏப்ரல் முதல் வாகனம் மற்றும் சுகாதார இன்சூரன்ஸ் காப்பீடு பிரீமியம் விலை உயர வாய்ப்பு..!

மூன்றாம் நபர்களுக்கான வாகன இன்சூரன்ச்ஸ் எனப்படும் வாகன ஓட்டிகளுக்கான இன்சூரன்ஸ் காப்பீடு பிரீமியத்தின் விலை ஏப்ரல் முதல் உயர இருக்கின்றது. ஐஆர்டிஏ (ஆணையத்தின் கொடுப்பனவு அல்லது ஊதியம் அல்லது வெகுமதி காப்புறுதி முகவர்கள் மற்றும் காப்புறுதி இடைத்தரகர்களுக்கு) ஒழுங்குவிதிகள் 2016 ஏப்ரல் 1, 2017 முதல் அமலுக்கு வருகிறது.

கமிஷன் / ஊதியம் விகிதங்களில் திருத்தம் கொண்டு வருவது போன்று புதிதாக வெகுமதிகள் வழங்கும் முறையும் அறிமுகப்படுத்துவதாகக் காப்பீடுகள் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனால் காப்பீட்டாளர்களின் பிரீமியம் கட்டணம் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இந்தப் பிரீமியம் விலை உயர்வு +/- 5 சதவீதமாக இருக்கும் என்றும் ஐஆர்டிஏ கூறுகின்றது.

மேலும், காப்பீட்டு நிறுவனங்கள் பிரீமியம் விலை மற்றும் பிற காப்பீடு விதிகளில் புதிதாக மாற்றம் ஏதும் செய்யப்படாது என்பதற்கான சான்றிதழ்கள் அளிக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+