3 வருடங்களாக தொடந்து நஷ்டம்.. 43 நிறுவனங்களை பட்டியல் போட்ட மத்திய அரசு..!
மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர் இந்தியா, பிஎஸ்என்எல் உட்பட 43 நிறுவனங்கள் தொடர்ந்து 3 வருடங்களாக நஷ்டத்தில் இயங்கிய வருகிறது என நாடாளுமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டது.
என்ன காரணம்
ஊழியர்கள் பற்றாக்குறை, குறைந்த அளவிலான பயன்பாடு, எண்ணெய் தளம் மற்றும் உபகரணங்கள், அதிகளவிலான போட்டி, மோசமான மார்கெடிட்ங் மற்றும் முறையற்ற நிர்வாகம் ஆகியவற்றின் காரணமாக இந்த 43 மத்திய அரசு நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது.
43 நிறுவனங்கள்
பொதுத்துறை நிறுவன ஆய்வு 2015-16இன் படி 2013-16 நிதியாண்டுகளில் 43 பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து 3 வருடம் நட்டத்தை மட்டுமே சந்தித்துள்ளதாக ஹெவி இன்டஸ்ட்ரீஸ் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் மாநில அமைச்சரான பபுல் சுப்ரியோ நாடாளுமன்றத்திற்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
ஏர்இந்தியா
இந்தியாவில் விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா, டெலிகாம் சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் ஆகியவற்றைத் தாண்டி, பிரிட்டிஷ் இந்தியா கார்பரேஷன், ஹிந்துஸ்தான் ஆன்டி பயோடிக்ஸ், எச்எம்டி வாட்சஸ் லிமிடெட், இந்தியன் டிரக் மற்றும் பார்மா ஆகிய நிறுவனங்களும் இந்த 43 நிறுவனங்களில் அடக்கம்.
லாபத்தை நோக்கி
மேலும் லாபத்தை ஈட்டும் வகையில், ஹிந்துஸ்தான் பேப்பர் கார்பரேஷந் கீழ் இயங்கும் சாசர் பேப்பர் மில் மற்றும் நாகோன் பேப்பர் மில் ஆகியவற்றை நவீனமயமாக்கம் செய்யவும் மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications