மோசடியாளர்களுக்கு ஜாமீன் கிடையாது.. கைது செய்ய வாரன்ட் கூடத் தேவையில்லை: ஜிஎஸ்டி
இந்தியாவில் ஜூலை 1ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், இன்று மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 290 புள்ளிகள் வரை உயர்வடைந்துள்ளது.
ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்பவர்கள் ஜாமீனில் வெளிவராத குற்றமாகக் கருதப்படுவார்கள். மேலும் கைது செய்யக் காவல் துறைக்குப் பிடி வாரன்ட் தேவையில்லை, நேரடியாகக் கைது செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5 கோடி ரூபாய்
சென்டரல் ஜிஎஸ்டி சட்டதிட்டத்தின் பிடி வரிகளுக்கு உட்பட்ட சரக்கு மற்றும்/அல்லது சேவையில் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி ஏய்ப்பு செய்தாலோ, முறைகேடான பணத்தைப் பெற்றாலோ அவை ஜாமீனில் வெளிவராத குற்றமாகக் கருதப்படும்.
25,000 அபராதம்
மேலும் கைது செய்யப்பட்ட நபர் 24 மணிநேரத்தில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஒப்படைக்க வேண்டும். மத்திய மற்றும் மாநில ஜிஎஸ்டி அமைப்புகள் சமன் அனுப்பபட்ட அந்த நபர் அதிகாரி முன் ஆஜராகவிட்டால் 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
மத்திய மற்றும் மாநில ஜிஎஸ்டி அமைப்புகள்
மத்திய மற்றும் மாநில ஜிஎஸ்டி சட்டங்கள் காவல் துறை, ரயில்வே, சுங்கத்துறை, கிராம அதிகாரிகள் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளும் மத்திய மற்றும் மாநில ஜிஎஸ்டி அமைப்பிற்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 1
ஜூலை 1ஆம் தேதி அமலாக்கம் செய்யப்பட உள்ள ஜிஎஸ்டி தற்போது நடைமுறையில் இருக்கும் கலால் வரி, சேவை வரி, வாட் வரி மற்றும் பிற உள்ளூர் வரி என அனைத்தையும் நீக்கும் ஒன்றாக உள்ளது.


Click it and Unblock the Notifications