ஜிஎஸ்டி அமலுக்கு வரும்போது 70 சதவீத சரக்கு பொருட்கள் மற்றும் நுகர்வோர் சாதனங்களின் விலை குறையும்!
நாம் தினசரி பயன்படுத்தும் காஸ்மெடிக்ஸ், ஷேவிங் க்ரீம், ஷேம்ப்பு, டூத்பேஸ்ட், சோப்பு, பிலாஸ்டிக், பெயின்ட் மற்றும் சில நுகர்வோர் சாதனங்களின் மீதானான் வரி ஜிஎஸ்டி அமலுக்கு வரும் போது 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறையும்.
இந்தியாவில் ஜிஎஸ்டி அமலுக்கு வருவதற்கான வரம்புகள் முடிவு செய்யப்பட்டு வருகின்றது என்றும் நிறையப் பொருட்களின் விலை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உதாரணத்திற்கு 12 சதவீத கலால் வரி உள்ள பொருட்களுக்கு 8 சதவீதமாக வரி குறைக்கப்படும் என்றும் இதனால் 70 சதவீத சரக்கு பொருட்களின் விலை 18 சதவீத வரி வரம்பிற்குள் இருக்கும்.
ஜிஎஸ்டி வரி வரம்பு
ஜிஎஸ்டி குழு வரி அமைப்பை 5%, 12%, 18%, 28% என நான்கு விதமாக அமைத்துள்ளது. பின்னர் அதிகபட்ச வரம்பாகச் சில தயாரிப்புகளுக்கு மட்டும் 40 சதவீதமாக வரி விகிதத்தை அமைத்துள்ளது.
எப்போது முதல் இந்தியாவின் மிகப் பெரிய வரிச் சீர்திருத்தம்?
ஜிஎஸ்டி குழுவின் அடுத்துக் கூட்டம் மே 18 மற்றும் 19-ம் தேதிகளில் நடைபெற இருக்கின்றது. இந்தியாவின் மிகப் பெரிய வரிச் சீர்திருத்தம் ஜூலை 1 முதல் அமலுக்கு வர இருக்கின்றது.
ஜிஎஸ்டி முறைக்கு மாறும் போது பொதுமக்கள் விலையைக் கண்டு பயப்படாத வகையில் பணிகள் மேற்கொண்டு வருகின்றது. நுகர்வோருக்குக் குறைவான விலையில் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதில் அரசு தீவிரமாக உள்ளது.
காணாமல் போகும் வரிகள்
ஜிஎஸ்டி அமலுக்கு வரும் போது மத்திய வரிகளான மத்திய கலால், சேவை வரி மற்றும் செஸ் உடன் மாநில வரிகளான வாட் எனப்படும் மதிப்புக்கூட்டு வரி, கொள்முதல் வரி மற்றும் பொழுதுபோக்கு வரி உள்ளிடவை எல்லாம் ஒரு வரியில் அடங்கும்.
வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும்
விலை குறைப்பு மற்றும் திறன் பெருகுதல் போன்றவை ஜிஎஸ்டி மூலம் சாத்தியம் ஆகும் போது இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 1 முதல் 2 சதவீதம் வரை மேலும் உயரும்..
அதிகபட்ச விலையில் இருந்து 35 சதவீத விலை குறைய வாய்ப்பு
பல நுகர்வோர் பொருட்களின் விலை அதிகபட்ச விலையில் இருந்து 30 முதல் 35 சதவீதம் குறையும். அதனால் ஒன்று நிச்சயம் கலால் வரி 100 ரூபாய்க்கு 8 முதல் 9 சதவீதக இருக்கும். வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் விலை மீதான வரி 28 சதவீதமாக இல்லாமல் 18 சதவீதமாகக் குறையும் போது பல பொருட்களில் விலை குறையும்.
உணவுப் பொருட்கள்
நுகர்வோர் பொருட்கள் விலை என்ன தான் குறைந்தாலும் உணவு பொருட்களின் விலை 1 முதல் 2 சதவீதம் வரை உயரும்.


Click it and Unblock the Notifications