சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு 56,000 கோடி வரி சலுகை.. அப்போ விவசாயிகளுக்கு..?!
மத்திய அரசு 2016-2017 நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 9 மாதங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மட்டும் 56,000 கோடி ரூபாய் வரி தள்ளுபடி அளித்துள்ளது என்று பாராளுமன்றத்தில் தகவல் தருவிக்கப்பட்டுள்ளது.
2015-2016 நிதி ஆண்டில் மொத்தம் 52,216 கோடி ரூபாய் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் மக்களவையில் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் ஏற்றுமதி அளவு
சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் இருந்து 2016-2017 நிதி ஆண்டில் டிசம்பர் மாதம் வரை 3.58 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளதாகவும், இதுவே 2015-2016 முழு நிதி ஆண்டில் 4 லட்சத்து 67 ஆயிரத்து 337 கோடி ரூபாய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
மூடப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்
அதே நேரம் பொருளாதார மாற்றங்களால் 109 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்குநர்கள் தங்களது திட்டங்களைச் சில மாநிலங்களில் இருந்து ரத்து செய்துள்ளனர் என்றும் அதில் மகாராஷ்டிராவில் இருந்து 28 மண்டலங்களும், தெலுங்கானாவில் இருந்து 14 மண்டலங்களும், தமிழகத்தில் இருந்து 10 மண்டலங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
100 சதவீத வரி விலக்கு பெறும் நிறுவனங்கள்
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் துவங்கப்படும் போது 5 வருடங்களுக்கு 100 சதவீதம் வரை ஏற்றுமதி வருவாயில் முழு வருமான வரி விலக்கும், இதனைத் தொடர்ந்து அடுத்த ஐந்து வருடங்களுக்கு 50 சதவீதம் வருமான வரி விலக்கும் எதிர்பார்க்கின்றன.
அமெரிக்கா விசா சிக்கல்கள் குறித்துப் புகார்
மற்றோறு கேள்விக்குப் பதில் அளித்த நிர்மலா சீதாராமன் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுடன் ஐடி வல்லுநர்களுக்கு நல்ல அணுகலை ஏற்படுத்தித் தர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகின்றது.
அமெரிக்காவின் விசா கெடுபிடிகள் குறித்து உலக வர்த்தக அமைப்பு உடன் புகார் அளித்துள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.
மாமிசம் ஏற்றுமதி
மாமிசம் ஏற்றுமதி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த நிர்மலா சீதாராமன் சென்ற நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி மாதம் வரை 22,074 கோடிகளாக மாமிசம் ஏற்றுமதி உள்ளது என்று தெரிவித்தார்.
2015-2016 நிதி ஆண்டில் மொத்தமாக 22,074 கோடி ரூபாயாக மாமிச ஏற்றுமதி இருந்தது.
மாமிசம் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்குப் புதிய விதிகள்
தற்போதய வெளிநாட்டு வர்த்தகம் கொள்கைகளின் படி மாமிசம் ஏற்றுமதி செய்யும் அனைத்து நிறுவனங்களும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA)-ல் பதிவு செய்திருக்க வேண்டும்.
இந்தியாவில் இருந்து 81 நிறுவனங்கள் மாமிசம் ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகள்
விவசாயிகள் பெறும் வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்க முடியாத அரசு இது போன்று கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு மட்டும் 100 சதவீதம், 50 சதவீதம் என 10 ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளிக்கின்றது. இது குறித்த உங்கள் கருத்துக்களைக் கீழே கருத்திடவும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications