ஜிஎஸ்டியும்.. விவசாயமும்..
2017ஆம் ஆண்டின் ஜூலை 1ஆம் தேதி முதல் இந்தியாவில் அமலாக்கம் செய்யப்பட உள்ள ஜிஎஸ்டியில் விவசாயிகளின் நிலைப்பாடு என்ன..?
ஜிஎஸ்டி வரி சட்டத்தின் படி, விவசாயிகள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் கொண்டு விவசாயம் செய்து வருடம் 20 லட்சம் ரூபாய் வரையிலான விற்றுமுதல் (Turnover) கொண்டவர்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்குள் வரமாட்டார்கள்.
அதே ஆட்களைப் பணியில் அமர்த்தி வருடம் 20 லட்சம் ரூபாய் வரையிலான விற்றுமுதல் கொண்டவர்கள் ஜிஎஸ்டி வரியின் கீழ் பதிவு செய்தாக வேண்டும்.
விவசாயத் துறை
பட்டுப்புழு, மலர், பால், தோட்டக்கலை, மீன்பிடி ஆகிய தொழில்களில் இயல்பாகவே அதிகளவிலான ஆட்களைப் பணியில் அமர்த்தப்பட்டுச் செய்யப்படும் தொழில் என்பதாலும், இவை விவசாயத் துறைக்குக் கீழ் வருவதாலும், இதுநாள் வரை இதற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது.
முக்கியக் கூட்டம்
தற்போது ஜிஎஸ்டியின் கீழ் இது மாறுபடுமா என்பது கேள்வியாகவே உள்ள நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் மே 18-19 நடத்தும் முக்கியக் கூட்டத்தை இதுகுறித்த முழுமையாக முடிவுகள் எடுக்கப்படும்.
ஜிஎஸ்டி
மத்திய அரசு விவசாயிகளுக்கு நிர்ணயம் செய்யப்படும் அளவுகளை விடவும் அதிகமாக இருக்கும் அனைவரும் ஜிஎஸ்டி வரியின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும் விவசாயிகள் அல்லாத சரக்கு மற்றும் சேவையை வர்த்தகச் சந்தைக்குக் கொண்டு வரும் அனைவரும் ஜிஎஸ்டி-யின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.
சேவை வரி
ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின், தற்போது சேவை வரி 15 சதவீத விதிக்கப்பட்டும் அனைத்தும் 18 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக்த் ஆதியா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications