சேவை வரி 18 சதவீதமாக உயரும் அபாயம்.. ஜிஎஸ்டி எதிரொலி..!
இந்தியாவில் ஜிஎஸ்டி வரி வருகிற ஜூலை 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்ய மத்திய மற்றும் மாநில நிதியமைச்சகங்கள் அனைத்துப் பணிகளையும் வேகமாகச் செய்து வரும் நிலையில், மக்களைப் பாதிக்கும் வகையில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார் வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக்த் ஆதியா.
ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் தற்போது சேவை வரி 15 சதவீத விதிக்கப்பட்டும் அனைத்தும் 18 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என ஆதியா தெரிவித்துள்ளார்.
மக்கள் தினசரி பயன்படுத்தும் அனைத்துச் சேவைகளிலும் சேவை வரி இருக்கும் காரணத்தால் இது மக்களை நேரடியாகப் பாதிக்கும். மேலும் ஜிஎஸ்டி அமலாக்கத்தின் காரணமாக மத்திய பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி சேவை வரியில் எவ்விதமான உயர்வையும் அறிவிக்கவில்லை. தற்போது ஜிஎஸ்டி தொடர்பான 4 முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று ஜூலை 1 முதல் அமலாக்கம் செய்யும் நிலையில் சேவை வரி விதிக்கப்படும் பொருட்களுக்கு 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. இதன் காரணமாகவே இத்தகைய கருத்தை ஹஷ்முக்த் ஆதியா வெளியிட்டுள்ளார். தற்போது நடைமுறையில் இருக்கும் சுகாதாரம், கல்வி, விவசாயம் ஆகிய துறைகளுக்கு அளிக்கப்படும் சேவை வரி விலக்கு தொடரும் எனவும் தெரிகிறது. மேலும் தற்போது 60 சேவைகளுக்குத் தற்போது மத்திய அரசு சேவை வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறகு. இந்தச் சலுகைகள் மேலும் தொடரும். சந்தையில் சேவை வரியாக 14 சதவீதமும், சுவச் பாரத் செஸ் பெயரில் 0.5 சதவீதமும், கிரிஷ் கல்யாண் செஸ் பெயரில் 0.5 சதவீதமும் ஆகச் சேவை வரியாக மத்திய அரசு சுமார் 15 சதவீத வரியை வசூல் செய்கிறது. தற்போது நடைமுறையில் 15 சதவீத்திற்கும் குறைவாக வரி விதிக்கப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி அமலாக்கிற்குப் பின் குறைந்த அளவிலான வரியை மட்டுமே பெறும். உதாரணமாகத் தற்போது போக்குவரத்துத் துறை குறைவான சேவை வரி பெறும் காரணத்தால், ஜிஎஸ்டிக்குப் பின் இது 5 அல்லது 12 சதவீத வரியைப் பெறும். அதேபோல் பெட்ரோல் மற்றும் பெட்ரோலியம் சார்ந்த பொருட்களுக்கு 0% வரி விதிக்கப்படும் காரணத்திற்காகப் போக்குவரத்துத் துறை 5 சதவீத வரி விதிப்பில் வர அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் மே 18-19 ஸ்ரீநகரில் முக்கியக் கூட்டத்தை நடத்துகிறது. இதில் ஜிஎஸ்டி வரி அமைப்பில் எந்தெந்த சேவைகள், சரக்குகள் எவ்வளவு வரி விதிக்கப்படும் என்பது குறித்து இறுதியான முடிவை எடுக்கப்படும். இதன் மூலம் ஜூலை 1ஆம் தேதி திட்டமிட்டபடி ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்படும் என ஆதியா தெரிவித்துள்ளார்.
சேவை வரி உயர்வு..
ஜிஎஸ்டி அமலாக்கம்
விலக்கு
15 சதவீத சேவை வரி
பிரிவு
மே 18-19
ஜூலை 1


Click it and Unblock the Notifications