வீட்டு வேலை செய்தாலும் இங்கதான் செய்யனும்.. ஏகப்பட்ட சம்பளம்..!

ஐந்து இலக்க சம்பளம், பண்டிகை போனஸ், தேவைப்படும் போது முன்பணம், வார விடுமுறை என இது அனைத்தும் குர்கானில் நன்கு பயிற்சி செய்யப்பட்ட வீட்டு வேலை செய்யும் பெண்களுக்குக் கிடைக்கின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

இவை மட்டும் இல்லாமல் இந்தப் பட்டியலில் பின்னை மேலும் அதிகரிக்கின்றது என்றும் கூறப்படுகின்றது, இது அவர்கள் நன்கு வீட்டு வேலை செய்கிறார்கள் என்பதற்காக மட்டும் இல்லை குறைந்தது 5 வருடங்கள் வரை ஒரே வீட்டில் பணிபுரிவார்கள் என்பதற்காகவும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

எளிதாக விட்டுச் செல்லாத பணிப் பெண்கள்

எளிதாக விட்டுச் செல்லாத பணிப் பெண்கள்

பல குர்கான் வாசிகள் இப்போது ஏசி உடன் கூடிய தனி அறை, எல்சிடி டிவி, டிடிஎ சேவை உள்ளிட்டவற்றையும் தங்களது வீட்டுப் பணிப்பெண்களுக்கு அளிக்கின்றனர். அதனால் இங்குப் பணிப்பெண்கள் வேலையை எளிதாக விட்டுவிட்டுச் செல்வதும் இல்லை.

வசதி

வசதி

பணிப்பெண்களுக்குத் தனி அறை அளிப்பது மனிதாபிமானச் செயல் தான் என்றும், அவர்கள் டிவி கேட்பதும் நியாயம் தான், இதனால் அவர்களுக்கான தனியுரிமை, சஞ்சலத்தையும், தனியாக நேரத்தைக் கழிக்கத் தேவையான இடம் ஆகியவை அளிப்பதினால் நாம் ஒன்று குறைந்து விடப்போவதில்லை என்றும் மேலும் அவர்கள் நமக்குச் சேவை செய்யத் தான் வருகிறார்கள், மூன்றாம் தர குடிமகன் போல நாம் அவர்களை நடத்துவது சரியல்ல என்றும் குர்கான் சேர்ந்த வணிகம் செய்யும் பெண்ணான தென்னி மேஜியா கூறினார்.

அதிக நேரம் பணிபுரியும் பணிப்பெண்

அதிக நேரம் பணிபுரியும் பணிப்பெண்

முழு நேரப் பணிப்பெண் அல்லது இங்கேயே தங்கி வேலை பார்க்கும் பெண்கள் என அனைவருக்கும் இப்போது பணியின் போது ஓய்வு எடுக்கத் தனி அறை அளிக்கப்படுகின்றது, குறிப்பாகப் பணிப்பெண்கள் அதிக நேரம் பணிபுரியும் போது இந்த வசதிகள் அளிக்கப்படுகின்றது.

இவை மட்டும் இல்லாமல் இலவச வைஃபை மற்றும் பிற ஊக்கத்தொகைகளும் இவர்களுக்கு அளிக்கப்படுகின்றது.

 

உண்மையான கதை

உண்மையான கதை

எனது வீட்டில் அனைத்து அறையிலும் டிவி, ஏசி போன்றவை உள்ளது, அப்போது தான் நான் ஏன் விருந்தினர் அறையைத் தனது பணிப்பெண்ணிற்கு அளிக்கக் கூடாது என்று முடிவு செய்ததாகவும் அதனால் எனக்கு ஒரு நல்ல பணிப்பெண் கிடைத்துள்ளதாகவும் எனது வாழ்க்கையை இப்போது எளிமையாக உள்ளதாகவும் டிஎல்எ பேஸ் 2-ல் தங்கி இருந்து சைபர் சிட்டியில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரியும் சரிகா மேத்தா கூறினார்.

அழகு சிகிச்சைகள் முக்கியமானதாகும்

அழகு சிகிச்சைகள் முக்கியமானதாகும்

செக்டார் 27-ல் வசிக்கும் ஷாலினி ஜெய்ன் தனது வீட்டில் பணிபுரியும் பெண்ணிற்கு நல்ல உடை, சிகை அலங்காரம், அழகு சிகிச்சைகள் போன்றவற்றை எடுத்துக்கொள்வதில் விருப்பம் உடையவர் என்றும் அதனால் எனது வீட்டிற்கு அழகு சிகிச்சைகள் செய்பவர்கள் வரும் போது பணிப்பெண்ணிற்கும் தெரிட்டிங் போன்ற சிகிச்சைகளை அளிப்பேன் என்றும், அதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார் என்றும், முடி அணிகலன்கள் போன்றவற்றை வாங்கச் செல்லும் போது பணிப்பெண்ணையும் அழைத்துச் சென்று அவர்களுக்கு வாங்கிக் கொடுத்து மகிழ்விப்பேன் என்றார்.

பணம் முக்கியம் அல்ல

பணம் முக்கியம் அல்ல

ராஹேஜா அட்லைண்ட்ஸ்-ல் வசிக்கும் ஸ்ரூதி மிட்டல் ஏசி, டிவி உள்ளிட்டவை அளிப்பது கட்டாயம் என்றும், சில நபர்கள் தங்களுடன் பணிப்பெண்களை வெளியில் அழைத்துச் செல்லும் போது அவர்களும் தங்களுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர் இதில் தவறு ஏதும் இல்லை என்றார்.

இப்போது மீண்டும் தலைப்பை மீண்டும் படியுங்கள்...!

 

சென்னையில் பணிப்பெண்களின் நிலை

சென்னையில் பணிப்பெண்களின் நிலை

சென்னையில் பணிப்பெண்கள் சராசரியாக 8,500 ரூபாய் வரை மட்டுமே சம்பளமாக பெறுகின்றனர். நிறுவனங்களில் பணிப்பெண்களாக இருப்பவர்களும் அதிகபட்சம் 10,000 ரூபாய் வரை மட்டுமே சம்பளமாகச் சென்னையில் பெறுவது குறிப்பிடத்தக்கது.

பிற நகரங்களில் பணிப்பெண்களின் சம்பளம்

பிற நகரங்களில் பணிப்பெண்களின் சம்பளம்

டெல்லி, மும்பை மற்றும் ஹைதராபாத்தில் பணிப்பெண்கள் சராசரியாக 8,500 ரூபாயும், பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் 7,000 ரூபாயும், குறைந்தபட்சமாகக் குஜராத் தலைநகரமான அகமதாபாத்தில் 6,500 ரூபாய் சம்பளமாகவும் வழங்கப்படுகின்றது.

இரண்டு குழந்தைகளுக்கு அதிகமாக இருந்தால் அரசு வேலை கிடையாது: பாஜக அரசு அதிரடி முடிவு..!

இரண்டு குழந்தைகளுக்கு அதிகமாக இருந்தால் அரசு வேலை கிடையாது: பாஜக அரசு அதிரடி முடிவு..!

பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வரும் ஆசாமில் மக்கள் தொகை குறித்து அன்மையில் சர்ச்சையான சட்டத் திருத்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+