இரண்டு குழந்தைகளுக்கு அதிகமாக இருந்தால் அரசு வேலை கிடையாது: பாஜக அரசு அதிரடி முடிவு..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வரும் ஆசாமில் மக்கள் தொகை குறித்து அன்மையில் மக்கள் தொகை குறித்துச் சர்ச்சையான சட்டத் திருத்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சட்ட திருத்தன் படி ஒரு வீட்டில் இரண்டு குழந்தைகளுக்கு அதிகமாக இருந்தால் அவர்களுக்கு அரசு நிறுவனங்களில் பணி வாய்ப்பு அளிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் அரசு வீடு, தேர்தலில் நிறுக்கும் உரிமையும் கிடையாது என்று கூறப்படுகின்றது.

இது போன்று பிற உலக நாடுகளிலும் பல விதமான சட்டங்கள் உள்ளது அவை என்னவென்று இங்குப் பார்ப்போம்.

சீனா: ஒரு குழந்தையில் இருந்து இரண்டு குழந்தை

பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் பெருகி வரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவும் 1970-களில் ஒரு குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சீனாவில் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்காக மக்கள் ஒன்றும் ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்ளவில்லை. இரண்டு மூன்று பெற்றுக்கொண்டார்கள். ஆனால் அவர்களுக்கு முறையான குடியுரிமை இல்லாமல் சொந்த நாட்டிலேயே அகதிகள் போல் கூடுதலாகப் பிறந்த குழந்தைகள் நிலை இருந்து வந்தது.

பின்னர் 2013-ம் ஆண்டுச் சீன அரசு திருமணம் ஆனவர்கள் இரண்டு குழந்தைகள் வரை பேற்றுக்கொள்ளாம் என்று அறிவித்தது, 2015-ம் ஆண்டுச் சட்டப்பூர்வமாகப் பாலின சமநிலை கருதி அனைத்துத் திருமணத் தம்பதியர்களையும் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளுமாறு சீன அரசு கூறியது. இது இன்று வரை சீன மக்களால் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

 

ஈரான்: அதிகம் குறைவு மீண்டும் அதிகம்

1979-ம் ஆண்டு ஈரான் தங்களது குடிமக்களுக்குப் பல குழந்தைகள் பேற்றுக்கொள்ள அனுமதி அளித்தது. ஆனால் 8 வருடங்களுக்குப் பின் 1988-ம் ஆண் ஆண்டு ஈராக் உடனான போருக்குப் பிறகு இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது.

ஆனால் 2006-ம் ஆண்டு மஹ்மூத் அஹ்மதிநெஜாட் அதிபராக இருந்த போது மீண்டும் எத்தனை குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்றும், நாடு 120 மில்லியன் எண்ணிக்கை வரையிலான மக்கள் தொகையைத் தாங்கும் என்றும் அறிவித்தார்.

 

வியட்நாம்

1960-ம் ஆண்டு வடக்கு வியட்நாம் அரசு குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதைக் குறைக்கக் கூறி ஒரு தம்பதியினருக்கு இரண்டு முதல் மூன்று குழந்தைகள் வரஒ இருக்கலாம் என்று கூறியது. பின்னர் 1970-ம் ஆண்டு இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டு என்று அறிவுறுத்தப்பட்டது.

கம்யூனிஸ்ட் அரசு இது போன்ற சட்டங்களில் திருத்தம் கொண்டு வரும் என்றாலும் 1970-ம் ஆண்டிற்குப் பிறகு இது போன்று சட்டங்களில் எந்தத் திருத்தங்களும் கொண்டு வரவில்லை.

 

 

குழந்தைகள் அதிகம் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் நாடுகள்

குழந்தைகள் பிறப்பது குறைவாக உள்ள நாடுகள் அதிகக் குழந்தைகள் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கின்றன. 2010-ம் ஆண்டுத் தென் கொரிய அரசு ஒவ்வொரு புதன்கிழமையும் அலுவலகங்களின் விளக்குகளும் அணைக்கப்பட வேண்டும் என்றும், இது குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்கு மட்டும் இல்லை, அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்காகவும் என்று அறிவித்தது.

சிங்கப்பூர்

சிங்கப்பூர் அரசு ஆண்டுக்கு 1.3 பில்லியன் டாலர் செலவழித்துக் குழந்தைகள் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கின்றது, அது மட்டும் இல்லாமல் அதிகக் குழந்தைகள் உள்ளவர்களுக்கு வரி விலக்கு மற்றும் மகப்பேறு கால விடுமுறையில் கூடுதல் சலுகைகளை அளிக்கின்றது. 2012-ம் ஆண்டு நீங்கள் நாட்டுப்பற்று உள்ள கணவன் மற்றும் மனைவியா அப்படியானால் குழந்தைகள் பெற்று நாட்டுக்கான கடமையை நிறைவேற்றுங்கள் என்று யூடியூபில் விளம்பரம் ஒன்றும் வெளியிடப்பட்டது.

ஜப்பான்

ஜப்பான் தனது நாட்டில் உள்ள மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக 2015-ம் ஆண்டு முதல் அதிக ஊக்குவிப்பு தொகையை அளிக்கின்றது. முதல் குழந்தை பெற்றுக்கொள்ளும் போது 940 டாலரும், இதுவே நான்காவது குழந்தை பெறும் போது அதில் 10 மடங்கு அதிகமாகவும் குழந்தைகள் பெறுவதற்கான ஊக்கத்தொகை அளிக்கப்படுகின்றது.

பிரான்ஸ்

குழந்தைகள் பெற்றுக்கொள்வதை அதிகம் ஊக்குவிக்கும் பிரான்ஸ் நாட்டில் பெரிய குடும்பங்கள் இருப்பது பெரிய பிரச்சனை கிடையாது. தனது நாட்டின் வளர்ச்சி விகிதத்தில் 2.6 சதவீதத்தை 2014-ம் ஆண்டு மக்கள் தொகைக்காகச் செலவு செய்தது குறிப்பிடத்தக்கது.

 

முதல் குழந்தைக்கு 16 வாரங்கள் மகப்பேறு கால விடுமுறையும், மூன்றாவது குழந்தைக்கு 26 வாரங்களும், குழந்தையை வளர்க்கக் குழந்தை ஆதரவு மற்றும் பிற சலுகைகளும் அளிக்கப்படுகின்றது.

பாரிசிஸ்

2011-ம் ஆண்டுப் பார்ஸிஸ் சமூகத்தின் மக்கள் தொகை18 சதவீதம் குறைந்ததை அடுத்து 2013-ம் ஆண்டு ஜியோ பார்ஸி என்ற பெயரில் முன்கூடியே திருமணச் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் முதல் குழந்தையை வளர்க்க மாதம் 3,000 ரூபாயாக 18 ஆண்டுகளும், மாதம் 5,000 ரூபாயாக இரண்டாம் குழந்தைக்கும் ஊக்கத்தொகை அளிக்கப்படும்.

பிற தகவல்கள்

ஆப்பிரிக்க நாடுகளில் அதிக அளவில் குழந்தை பிறப்பு விகிதம் உள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் சபை 2050-ம் ஆண்டு 9.7 பில்லியன் டாலர்களாக மக்கள் தொகை இருக்கும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

No government job for people with more than two kids

No government job for people with more than two kids
Story first published: Monday, April 17, 2017, 21:12 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns