ஒவ்வொரு வருடமும் அட்சய திருதியை தினத்தன்று இந்தியா முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களும் ஒரு குண்டுமணி தங்கத்தையாவது வாங்க முயற்சி செய்வார்கள், காரணம் இந்த நாளில் தங்கத்தை வாங்கினால் நம் வீட்டில் தங்கம் மலை மலையாகச் சேரும் என்பது ஐதீகம்.
ஆனால் இன்று 100 ரூபாய் செலவு செய்தாலும் அது லாபமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் பரவியிருக்கும் இத்தகைய வாழ்க்கை முறையில், அட்சய திருதியை தினத்தன்று தங்கத்தை வாங்கலாமா வேண்டாமா? என்பதையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
25 டன் தங்கம்
பொதுவாக அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்கும் ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகளவில் காணப்படுகிறது. கடந்த சில வருடங்களாக இந்த ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் சுமார் 15-25 டன் தங்கம் வர்த்தகச் சந்தைக்கு வருகிறது.
கடந்த வருடம் சுமார் 17 டன் தங்கத்தை இந்திய மக்கள் வாங்கிக் குவித்துள்ளனர்.
என்ன காரணம்??
இந்த அளவிற்கு மக்கள் தங்கத்தை வாங்க என்ன காரணம் என்று பார்த்தால், சிலர் சேமிப்புக்காவும், சிலர் முதலீடாகவும், சிலர் திருமணம், பண்டிகைக்காக எனப் பல காரணங்களுக்காக வாங்கப்படுகிறது.
இதில் பெரும்பாலானவை திருப்பிச் சந்தை விற்பனைக்கு வராமல் மக்கள் மத்தியில் சேமிப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
முதலீடு
நீங்கள் முதலீடாகத் தங்கத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதற்குத் தகுந்த லாபம் கிடைக்க வேண்டும் அல்லது கணிசமாக வங்கி வைப்பு நிதிக்கான வட்டி அளவிற்காவது லாபம் கிடைக்க வேண்டும்.
இல்லையெனில் நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்வது வீண் செலவு. இதில் தங்கம் விலை குறைந்தால் நஷ்டம் வேறு.
உண்மை நிலவரம்
கடந்த வருடம் அதே அட்சய திருதியை தினத்தன்று தங்கம் வாங்கியிருந்தால் இன்று உங்களுக்கு 3.5 சதவீதம் நஷ்டம் ஏற்பட்டு இருக்கும். இது தான் உண்மை.
இத்தகைய நிலைக்கு என்ன காரணம்.? அட்சய திருதியை தினத்தன்று தங்கத்தை வாங்கலாமா வேண்டாமா? வாங்க பார்ப்போம்.
சரிவிற்கு என்ன காரணம்
2016ஆம் ஆண்டு அட்சய திருதியை தினத்தில் அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்வு, பிரிட்டன் ஐரோப்பா பிரிவின் காரணமாகப் பங்குச்சந்தைகள் உலகளவில் மிகப்பெரிய சரிவை சந்தித்தது.
ஆனால் தற்போது தங்கம் விலை குறைந்துள்ளது. இதனால் தங்கத்தை வாங்கினால் லாபம் கிடைக்கும். ஆனால் இது சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாறுபடும்.
இதற்கு மாற்றுவழி உண்டா..?
சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த தங்க முதலீட்டுப் பத்திர திட்டம் இன்றைய வர்த்தகச் சூழ்நிலைக்கு மிகவும் சிறந்த திட்டமாகப் பார்க்கப்படுகிறது.
ஆம், இந்தப் பத்திரத்தில் முதலீடு செய்தால் வருடத்திற்கு 2.5 சதவீதம் வட்டி கிடைக்கிறது, மேலும் இது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளதால் அதிகளவிலான லாபம் கிடைக்கும். அனைத்திற்கும் மேலாக இத்திட்ட முதலீட்டில் கிடைக்கும் வருமானத்திற்கு வரி இல்லை.
முதிர்வு காலம்
இந்தப் பத்திரத்தின் 8 வருட முதிர்வு காலம் முடிந்த பின்பு நீங்கள் அதனைத் தங்கமாகவோ அல்லது ரூபாயாகவோ பெறலாம். மேலும் இந்தப் பத்திரத்தை வாங்க வாட் வரியுமில்லை.
தங்கம் விலை
மேலும் தங்கம் விலை குறித்து நகரங்கள் வாரியாக நேரலை தகவல்கலை தெரிந்துக்கொள்ள இதை கிளிக் செய்யுங்கள்.
More From GoodReturns

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!



Click it and Unblock the Notifications