இந்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு வரும் மேம்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி சுத்திகரிப்பு சுரங்க வசதிகளை அளித்து வரும் MMTC-PAMP இணைந்து பேடிஎம் இந்தச் சேவையை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்றது.
அக்ஷய திரிதியை முன்னிட்டுப் பேடிஎம் இ-காமர்ஸ் நிறுவனம் டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்கும் வசதியை அறிமுகப்படுத்துகின்றது. இந்தப் புதிய சேவையில் வாடிக்கையாளர்கள் தங்கத்தை எளிதாக உடனடியாக வாங்கவும், விற்க்கவும் முடியும்.
இந்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு வரும் மேம்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி சுத்திகரிப்பு சுரங்க வசதிகளை அளித்து வரும் MMTC-PAMP உடன் இணைந்து பேடிஎம் இந்தச் சேவையை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்றது.
MMTC-PAMP கட்டுப்பாட்டில் தங்கம்
பேடிஎம் வாடிக்கையாளர்கள் இணையதளம் மூலமாக MMTC-PAMP இன் மிகவும் பாதுகாப்பான சேமிப்புக்கள் சேவையை இலவசமாகப் பயன்படுத்திக் கூடுதல் கட்டணம் ஏதும் இல்லாமல் தங்கத்தை வாங்கினால் அவர்களே டிஜிட்டல் முறையில் தங்களது தங்கத்தைச் சேமித்து வைத்துக்கொள்வார்கள்.
வீட்டிற்கு டெலிவரி
மேலும் வாடிக்கையாளர்கள் தங்க நாணயமாக வீட்டிற்கே தங்கத்தைப் புக் செய்தும் பெற்றுக்கொள்ளலாம். அதுமட்டும் இல்லாமல் விற்க வேண்டும் என்றால் உடனடியாக இணையதளம் மூலம் விற்றும் விடலாம்.
எதனால் பேடிஎம்-ல் ட்ஜிட்டல் தங்க முதலீடு சேவை?
இந்தியர்கள் தங்கத்தில் முதலீடு செய்யப் பெறும் அளவில் விரும்புவார்கள் அதை மேலும் எளிமைப் படுத்தும் விதமாக டிஜிட்டல் முறையில் தங்கத்தில் முதலீடு செய்யும் சேவை அளிக்க இருப்பதாக இந்தச் சேவையை அறிமுகம் செய்த பேடிஎம் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான விஜய் சேகர் ஷர்மா தெரிவித்தார்.
உலகத்தரம் வாய்ந்த தங்கம்
பேடிஎம் நிறுவனத்தின் இந்தச் சேவை மூலமாகப் பேடிஎம் வாடிக்கையாளர்கள் உலகத்தரம் வாய்ந்த தங்கத்தை எளிதாக உடனடியாக, வாங்கவும், விற்கவும் முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் அவர்களது எவ்வளவு ரூபாய்க்கு வேண்டும் என்றாலும் தங்கம் வாங்கலாம் என்றும் தங்கத்தை டிஜிட்டல் முறையில் வங்கும் பழக்கம் அதிகரிக்கும் என்று ஷர்மா கூறியுள்ளார்.
1 ரூபாய்க்குத் தங்கம் வாங்கலாம்
டிஜிட்டல் முறையில் தங்கத்தை வாங்குவதை ஊக்குவிக்கும் விதமாக 1 ரூபாய்க்குக் கூடத் தங்கம் வாங்கலாம் என்று கூறப்படுகின்றது. இது எப்படி என்று நாளை தான் தெரியவரும்.
கேஷ்பேக் ஆஃபர்
பேடிஎம் நிறுவனம் தனது இணையதளத்தில் 11 ரூபாய்க்குத் தங்க வாங்கினால் 11 ரூபாய் கேஷ் பேக் ஆஃபரும் அறிவித்துள்ளது. இதற்கு வாடிக்கையாளர்கள் ‘AKTGOLD' ப்ரோமோ குறியீட்டை உள்ளிட வேண்டும்.
கேஷ்பேக் ஆஃபர் விதிகள்
10 ரூபாய்க்குத் தங்கம் வாங்கினால் கேஷ்பேக் அளிக்கப்பட மாட்டாது. 11 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை முதலீடு செய்தால் 11 ரூபாய் கேஷ் பே கிடைக்கும். இதுவே 101 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை தங்கம் வாங்கினால் 15 ரூபாய் கேஷ் பே கிடைக்கும். 1001 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை தங்கம் வாங்கினால் 21 ரூபாய் கேஷ் பே கிடைக்கும். 5001 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை தங்கம் வாங்கினால் 51 ரூபாய் கேஷ் பே கிடைக்கும். 10,000 ரூபாய்க்கும் அதிகமாகத் தங்கம் வாங்கும் போது 101 ரூபாய் கேஷ்பே கிடைக்கும். அதிகபட்சம் 101 ரூபாய் மட்டுமே கேச்பேக் ஆஃபராகப் பெற முடியும். பிரோமோ குறியீட்டை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.
எப்படி இது வேலை செய்யும்
24 காரட் தங்கத்தை 1 ரூபாய் முதல் வாங்கலாம், இதனைத் தங்க பேலன்சாகச் சேமிக்கலாம், வேண்டும் என்றால் தங்க நாணயமாக வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும், இல்லை விற்க வேண்டும் என்றாலும் உடனே விற்றுப் பணமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
செய்கூலி
நாணயமாகப் பெறும் போது 377 ரூபாய் முதல் 781 ரூபாய் வரை செய்கூலி உண்டு.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?



Click it and Unblock the Notifications