கச்சா எண்ணெய் விலை உயர்வால் சென்செக்ஸ் குறியீடு சரிவு..!
வெள்ளிக்கிழமை வர்த்தகம் துவக்கம் முதலே சரிவுடன் துவங்கிய மும்பை பங்குச்சந்தை இன்று 2வது நாளாகச் சரிவை சந்தித்துள்ளது.
இதன் மூலம் சென்செக்ஸ் குறியீடு 30,000 புள்ளிகள் என்ற நிலையில் சரிந்து முதலீட்டாளர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை விலை இன்று உயர்ந்து காணப்பட்டது இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்தனர். இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து குவியும் அன்னிய முதலீட்டின் அளவு அதிகளவில் குறைந்துள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 111.34 புள்ளிகள் சரிந்து 29,918.40 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 38.10 புள்ளிகள் சரிந்து 9,304.05 புள்ளிகள் அடைந்து இந்த வாரத்தின் வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications