ஜூலை 1-க்கு முன் பான் கார்டுடன் ஆதார் கார்டினை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்ததை அடுத்துப் பல பிரச்சனைகள் கிளம்பியது. அதில் முக்கியமான ஒன்று இரண்டு கார்டுகளிலும் பெயர் மற்றும் பிற விவரங்கள் ஒன்றாக இருக்க வேண்டும்.
ஆனால் பான் கார்டில் பெயருடன் இனிஷியலும், ஆதார் கார்டில் பெயர் மற்றும் இருந்ததால் இணைப்புச் செய்ய முடியவில்லை.
இதைப் போக்கும் விதமாக இணையதளம் வாயிலாகப் பான் கார்டு மற்றும் அதார் கார்டுகளில் உள்ள பிழையை நீக்க புதிய சேவையை வருமான வரித் துறை அறிமுகம் செய்துள்ளது.
புதிய இணைப்பு
பான் கார்டுடன் ஆதார் ஆட்டையை இணைப்பதற்காகப் புதிதாக இரண்டு இணைப்பைச் சேர்த்துள்ளது வருமான வரித் துறை. அதில் ஒரு இணைப்பின் மூலமாகப் பான் விவரங்களைத் திருத்துவது அல்லது புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது போன்றவற்றைச் செய்யலாம்.
இரண்டாவது இணைப்பு
இரண்டாவது இணைப்பில் ஆதார் விவரங்களைப் பயன்படுத்தி ஆதார் சுய சேவைத் தளத்தில் உள்நுழைந்து தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து விவரங்களைப் புதுப்பிக்கக் கோரிக்கை வைக்கலாம்.
இணைப்பை பூர்த்திச் செய்தவர்கள் விவரம்
ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பில் மொத்தமாக உள்ள 25 கோடி பான் கார்டு பயனர்களில் 1.22 கோடி நபர்கள் இரண்டையும் இணைத்துள்ளனர். ஆதார் கார்டு மொத்தமாக 111 கோடி நபர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி செலுத்துனர்கள் எண்ணிக்கை
வருமான வரித் துறையின் புள்ளிவிவரங்களின் படி 6 கோடி நபர்கள் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்கின்றனர்.
நிதி அமைச்சர் அறிவிப்பு
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 2017-2018ம் ஆண்டிற்கான நிதி மசோதா தாக்கல் செய்த போது வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் என்றும் அதார் கார்டுடன் பான கார்டினை இணைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
புதிய சேவை எப்போது அறிமுகம் செய்யப்பட்டது?
சென்ற வாரம் வருமான வரித் துறை ஆதார் கார்டுடன் பான் கார்டினை இணைப்பதற்கான புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இந்தப் புதிய சேவையின் மூலமாகப் பான் மற்றும் அதார் கார்டினை இந்தியாவின் தனித்த அடையாள அடையாள ஆணையத்தின் (UIDAI) தரவில் உள்ள பெயரின் அடிப்படையில் இணைத்துக்கொள்ள முடியும்.
அதார் தரவு திருத்தம்
இந்தியாவின் தனித்த அடையாள அடையாள ஆணையத்தின் (UIDAI)ல் இணைவரை சரிபார்த்து உறுதி செய்துகொள்ளலாம். ஒருவேலைச் சிறு தவறுகள் இருந்தால் ஆதார் கார்டில் இருந்து உங்களுக்கு ஒருமுறை கடவுச் சொல் அனுப்பப்படும். அதனைப் பயன்படுத்தித் திருத்தம் செய்துகொண்டு இணைக்கலாம்.
பான் ஆதார் திருத்தம்
அது மட்டும் இல்லாமல் வருமான வரித் துறை அறிமுகம் செய்துள்ள புதிய முறையிலும் பான் மற்றும் அதார் விவரங்களைத் திருத்திக்கொள்ளலாம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications