சில நாட்களுக்கு முன்பாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது துணை வங்கிகள் இணைப்பிற்குப் பின் வீட்டுக் கடனுக்கான வட்டியை பல மாதங்களுக்குப் பின் குறைத்தது.
இதனால் சந்தையில் போட்டி போடும் திட்டத்துடன் தனியார் வங்கிகளும் எப்போதுமில்லாத வகையில் எஸ்பிஐ வங்கிற்கு இணையான வட்டியை அறிவித்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி மாத சம்பளம் வாங்கும் 30 லட்சம் ரூபாய் கடனுக்கு 8.35 சதவீதமும், மற்றவர்களுக்கு 8.40 சதவீதம் அளவிலான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்துள்ளது.
எச்டிஎப்சி வங்கி
அதேபோல் எச்டிஎப்சி வங்கி பாலின பாகுப்பாடு இல்லாமல் 30 முதல் 75 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு 8.5 சதவீதம் வட்டியும், 75 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான கடனுக்கு 8.55 சதவீதம் வட்டியையும் நிர்ணயம் செய்துள்ளது.
எஸ்பிஐ வங்கி
மாத சம்பளக்காரர்களுக்கு அளிக்கும் 30 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு 8.60 சதவீதம் வட்டி விதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 8.35 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த 85 சதவீத வட்டி விகிதம் பெண்கள் மட்டுமே என்ற நிலையில் ஆண்களுக்கு 8.40 சதவீதம் என்ற அளவில் கடனை அளிக்கிறது எஸ்பிஐ.
ரூ.75 லட்சம் வரையிலான கடன்
மேலும் 30 லட்சத்திற்கும் அதிகமான கடன் தொகைக்கு 0.10 சதவீதம் வட்டி குறைக்கப்பட்டு 8.50 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 75 லட்சம் ரூபாய்க்கு அதிகமான கடனுக்கு 8.60 சதவீதம் எனப் பழைய வட்டியை தொடர்ந்து வசூல் செய்ய உள்ளதாகவும் அறிவித்தது எஸ்பிஐ.
தனிப்பட்ட வசதி
மேலும் ஐசிஐசிஐ வங்கி வங்கியில் கடன் வாங்க விரும்புவோர் முதல் 2 முதல் 3 வரையிலான காலத்திற்கு நிலையான வட்டி அல்லது மிதவை வட்டி விகிதத்தைத் தேர்ந்தெடுக்கும் வசதி உள்ளது.
இதன் பிறகு மிதவை வட்டி தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications