சரக்கு மற்றும் சேவை வரிக்கான ஜிஎஸ்டி கவுன்சில் சேவை வரியை 4 வகைகளாகப் பிரித்துள்ளது. இதனால் சேவை வரியில் பெரிய பாதிப்பு இருக்காது என்று கூறப்படுகின்றது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் முக்கிய முடிவாகக் கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கு ஜிஎஸ்டி-ல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விவரங்களை இன்று செய்தியாளர்களை ஸ்ரீநகரில் அருண் ஜெட்லி சந்தித்தபோது தெரிவித்ததில் இருந்த முக்கிய விவரங்களை இங்குப் பார்ப்போம்.
வரி வகைகள்
சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி வரி நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டு 5%, 12%, 18% மற்றும் ஆடம்பர பொருட்களுக்கு 28 சதவீதமாகவும் வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துத் துறை
போக்குவரத்துத் துறையில் ரயில்வே மற்றும் விமான டிக்கெட்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும், இதற்கு முக்கியக் காரணமாகப் பெட்ரோல் ஆகும்.
ஏசி ஹோட்டல்
ஏசி இல்லாத ஹோட்டல்களுக்கு என்றால் 12 சதவீதமும், ஏசி ஹோட்டல்களுக்குச் சென்றால் 18 சதவீதமும், இதுவே ஆடம்பர ஹோட்டல்களில் தங்கும் போது சேவை வரி கூடுதலாக இருக்கும்.
ஹோட்டல் மற்றும் லாட்ஜ் கட்டணத்தில் உள்ள விலக்கு
1000 ரூபாய்க்கும் குறைவான கட்டணத்தில் ஹோட்டல் மற்றும் லாட்ஜ்களில் செலவு செய்யும் போது வரி விலக்கு உண்டு. இதுவே 2,500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை செலவு செய்யும் போது 18 சதவீதமும், ஆடம்பர ஹோட்டல்களில் தங்கும் போது 28 சதவீதம் சேவை வரி செலுத்த வேண்டும்.
சினிமா கட்டணம் உயரும்
5 நட்சத்திர ஹோட்டல், ரேஸ் கிளப், சினிமா போன்றவற்றுக்கு ஆடம்பர சேவை வரியாக 28 சதவீதம் செலுத்த வேண்டும்.
மொபைல் கட்டணங்கள் உயரும்
டெலிபோன் மற்றும் கிரெடிட் கார்டு பில் போன்றவற்றுக்கு 15 சதவீதமாக உள்ள சேவை வரி 18 சதவீதமாக உயர்த்தப்படுகின்றது.
கல்வி மற்றும் சுகாதாரம்
சுகாதாரம் மற்றும் கல்வி இரண்டிற்கும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது. இதே போன்று பல சேவைகளில் வரி குறைய வாய்ப்புள்ளது.
தங்கம் மற்றும் சிகரெட்
தங்கம் மற்றும் சிகரெட் மீதான வரி அடுத்த ஜிஎஸ்டி கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்றும், அடுத்தக் கூட்டம் ஜூன் 3-ம் தேதி நடைபெறும் என்றும் கூறப்படுகின்றது.
கூடுதலாக எந்தப் புதிய சேவையும் இணைக்கப்படவில்லை
ஜிஎஸ்டி வரி அமலுக்கு வரும் போது தற்போது செவை வரி இல்லாத எந்தத் துறைகளும் வரிப் பட்டியலில் இணைக்கப்படவில்லை. அதனால் கூடுதலாக எந்தப் புதிய சேவைக்கும் வரி இல்லை.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications