எந்த பொருட்களுக்கு என்ன வரி.. ஜிஎஸ்டி கவுன்சில் அறிவிப்பு..!

ஜிஎஸ்டி என அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வருகிய ஜூலை 1ஆம் தேதி நாடு முழுவதும் அமலாக்கம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வரும் நிலையில், இப்புதிய வரி சட்டத்தின் முக்கிய ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

இக்கூட்டத்தில் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவும் வரி விதிக்கப்பட வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை நடத்தி இறுதி முடிவை எடுத்துள்ளது.

4 வரி விதிப்புகள்

4 வரி விதிப்புகள்

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட படி ஜிஎஸ்டி வரியில் 4 கட்ட வரி விதிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் 5%, 12%, 18% மற்றும் 28% ஆகியவை அடங்கும்.

இந்நிலையில் எந்தப் பொருட்களுக்கு என்ன வரியை ஜிஎஸ்டி குழு அறிவித்துள்ளது என்பதைப் பார்ப்போம்.

 

5 சதவீக வரி பட்டியல்

5 சதவீக வரி பட்டியல்

மீன் பில்லெட், கிரீம், கொழுப்புள்ள பால் பவுடர், பிராண்ட் பன்னீர், உறைந்த காய்கறிகள், காபி, தேநீர், மசாலா, பீச்சிக் ரொட்டி, ரஸ்க், சபுதானா, மண்ணெண்ணெய், நிலக்கரி, மருந்துகள், ஸ்டெண்ட், லைப்போட்ஸ் ஆகியவை 5 சதவீக வரிப் பட்டியலில் அடங்குகிறது.

12 சதவீத வரி பட்டியல்

12 சதவீத வரி பட்டியல்

உறைந்த இறைச்சி, வெண்ணெய், சீஸ், நெய், உலர்ந்த பழங்கள், விலங்கு கொழுப்பு, தொத்திறைச்சி, பழ சாறுகள், பூட்டியா, நம்காய்ன், ஆயுர்வேத மருந்துகள், பல் தூள், அகர்பாட்டி, வண்ணமயமான புத்தகங்கள், படப் புத்தகங்கள், குடை, தையல் இயந்திரம் மற்றும் செல்ஃபோன்கள் ஆகியவை 12 சதவீக வரிப் பட்டியலில் அடங்குகிறது.

 

 

18 சதவீத வரி பட்டியல்

18 சதவீத வரி பட்டியல்

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, பாஸ்தா, சோளப்பொறிகள் (CornFlakes), பேஸ்ட்ரீ மற்றும் கேக்குகள், பாதுகாக்கப்பட்ட காய்கறிகள், ஜாம், சுவையூட்டிகள், சூப்கள், ஐஸ் கிரீம், உடனடி உணவு கலவை, மினரெல் நீர், டிஸ்யூஸ், டேம்பன்கள், குறிப்புகள், எஃகு பொருட்கள், அச்சிடப்பட்ட சர்கியூர், கேமரா, ஸ்பீக்கர் மற்றும் மானிடெர்கள் ஆகியவை 18 சதவீக வரிப் பட்டியலில் அடங்குகிறது.

28 சதவீத வரி பட்டியல்

28 சதவீத வரி பட்டியல்

சுவீங்கம், மொலாசஸ், கோக்கோ இல்லாத சாக்லேட், சாக்லெட் பூசப்பட்ட வேபெல்ஸ் மற்றும் வேபர்ஸ், பான் மசாலா, ஏரேடெட் வாட்டர், பெயின்ட், deodorants, ஷேவிங் கிரீம்கள், ஆப்டர்ஷேவ், ஷாம்பு, டைய், சன்ஸ்கிரீன், வால்பேப்பர், செராமிக் டைல்ஸ், வாட்டர் ஹீட்டர், பாத்திரங்கழுவி, எடையிடப்படும் இயந்திரம், சலவை இயந்திரம், ஏடிஎம், வெண்டிங் மெஷின்கள், வாகுவம் கிளீனர், ஷேவர்ஸ், ஹேர் கிளிப்பர்ஸ், ஆட்டோமொபைல்ஸ், மோட்டார் சைக்கிள்கள், தனிப்பட்ட பயன்பாட்டிற்கான விமானம், மற்றும் பந்தயப் படகுகள் ஆகியவற்றுக்கு 28 சதவீத வரிப் பட்டியலில் அடங்குகிறது.

1,211 பொருட்கள்

1,211 பொருட்கள்

நேற்று நடந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் சுமார் 1,211 பொருட்களுக்கான வரியை நிர்ணயம் செய்துள்ளது. இக்கூட்டம் இன்றும் நடைபெறுவதால் கூட்டத்தின் முடிவில் முழுமையான வரி விபரங்கள் தெரியும்.

இதுவரை அறிவித்த பொருட்களில் முக்கியமான பொருட்கள் அனைத்தும் 18 சதவீதம் வரிப் பட்டியலில் அடங்குகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+