புதிய மொபைல் போன் வாங்க போரீங்களா..? ஜூலை 1க்குள் வாங்கி விடுங்கள்..! ஏன்..?

மொபைல் போன்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்ட்-ஐ மத்திய அரசு 12 சதவீதமாக உயர்த்தியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்கள் விலை உயரும் என்றும் இறக்குமதி செய்யும் மொபைல் போன்களின் விலை குறையும் என்று கூறப்படுகின்றது.

அது என்ன இறக்குமதி செய்யும் மொபைல் போன் விலை குறையும், இந்தியாவில் தயார்க்கும் மொபைல் போன் விலை அதிகரிக்கும் என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. வாங்க அதைப் பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

தீர்வு

தீர்வு

மத்திய அர்சு ஜூலை 1 முதல் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மொபைல் போன் தயாரிப்பாளர்களுக்குப் பல ஊக்கத் தொகைகளை அளிக்க முடிவு செய்துள்ளது. இதனால் ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட போன் தயாரிப்பாளர்கள் நன்கு பயன் அடைவார்கள்.

இறக்குமதி செய்யப்பட்ட போன் விலை குறையும்

இறக்குமதி செய்யப்பட்ட போன் விலை குறையும்

ஜிஎஸ்டி வரியினால் இறக்குமதி செய்யப்பட்ட மொபைல் போன் விலை குறையும், அதே நேரம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மொபைல் போன் விலை உயரும்.

இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும் மொபைல் போன்களுக்கு 17 முதல் 27 சதவீதமாக இருக்கும் கலால் வரி 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டதினால் விலை குறையும்

 

இந்திய உற்பத்தி மொபைல் போன்களின் நிலை

இந்திய உற்பத்தி மொபைல் போன்களின் நிலை

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் மொபைல் போன்களுக்கு 7.5 - 8% முதல் 17 சதவீதமாக உள்ளது, இதில் 5 முதல் 14.5 சதவீதம் வரையிலான வாட் வரியும் அடக்கம்.

அது இப்போது 12 சதவீதாம்க குறைக்கும் போது நன்மை என்றால் சில மொபைல் போன்கள் அதாவது ஆடம்பர மொபைல் போன்கள் விலை உயரும். உதாரணத்திற்குப் பெங்களூருவில் உள்ள பீனியாவில் தயாரிக்கப்படும் ஐபோன் அதிக விலைக்கு விற்கப்படும்.

 

இந்தியா தயாரிப்பு போன் விற்பனை

இந்தியா தயாரிப்பு போன் விற்பனை

மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் மொபைல் போன்கள் ஜனவரி-மார்ச் காலாண்டில் மட்டும் 80 சதவீதம் அதாவது 59 மில்லியன் போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டை விட இது 65% அதிகம் ஆகும்.

ஜூலை 1

ஜூலை 1

இறக்குமதி செய்யப்பட்ட மொபைல் போன் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மொபைல் போன்களுக்கான அடிப்படை சுங்க வரியில் மத்திய அரசு மாற்றம் செய்யும் என்று இந்திய நிறுவனங்கள் எதிர் பார்க்கின்றன. அதனால் ஜூலை 1-க்குள் இந்திய நிறுவனங்களுக்கான சாதகமான முடிவுகள் வருமா என்று பார்ப்போம்.

இ-காமர்ஸ் தளங்களின் மொபைல் போன் வாங்குதல்

இ-காமர்ஸ் தளங்களின் மொபைல் போன் வாங்குதல்

அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல், ஷாப்க்ளூஸ் மற்றும் பிற இணையதளங்களில் இருந்து மொபைல் போன் வாங்கும் போது குறைவான வரி வாட் வரி உள்ள மாநிலங்களின் விற்பனைக்கே முன்னுரிமை அள்ளிக்கின்றன. உதாரணத்திற்குப் பெங்களூரில் வாட் வரி அதிகம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+