முன்னால் இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் பிமல் ஜாலன் குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக லாபம் சம்பாதிக்கும் பணக்கார விவசாயிகளுக்கு வரி விதிக்க வேண்டும் என்றும் அதற்கான பணிகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் ஞயாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்திய மக்கள் வரி செலுத்துவதை அதிகரிக்க முயன்று வரும் மத்திய அரசை ஆதரித்துப் பேசிய ஜாலன் ஏற்கனவே சர்ச்சைக்குரிய கருத்தாகக் கருதப்படும் விவசியிகளுக்கு வரி விதிப்பது முக்கியம் என்று தெரிவித்திதது மட்டும் இல்லாமல் சிறிய விவசாயிகளின் முக்கியத்துவத்தைப் பற்றியும் பல கருத்தைக் கூறியுள்ளார். அதைப் பற்றி விரிவாக இங்குப் பார்ப்போம்.
அதிக நிலம் அதிக வருமான என்றால் வரி
அதிக விவசாய நிலமும் அதன் மூலமாக அதிக வருமானமும் வரும் போது வரி செலுத்த வேண்டும் என்று பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் ஜாலன் கூறியுள்ளார்.
அதே நேரம் அதிகமாகச் சிறிய அளவில் விவசாயம் செய்பவர்களே உள்ளார்கள் என்றும் அவர்களைப் பாதிக்காத வண்ணம் இந்த வரி விதிப்பு இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
ஆசிய நாணய நெருக்கடி
ஆசிய நாணய நெருக்கடியை இந்தியா மேற்கொண்டிருந்தபோது, ஜாலன் குறைந்த பணவீக்கம் மற்றும் உயர்ந்த வளர்ச்சி ஆகியவை தேசிய ஜனநாயகக் கட்சி அரசாங்கத்தின் முக்கியச் சாதனைகள் ஆகும் என்றும், ஆனால் ஊழலினை குறைக்க மற்றும் சிக்கலான நிர்வாக அமைப்பு முறையைச் சீர்திருத்துவதற்கு இதை மேலும் செய்ய வேண்டும் என்றார்.
வளர்ச்சியும் பணவீக்கமும்
நாம் என்ன சாதித்து உள்ளோம் என்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகின்றது என்றும் உதாரணத்திற்குச் சென்ற மூன்று ஆண்டுகளாக அதிக வளர்ச்சியும் குறைந்த பணவீக்கமும் உள்ளதாகக் கூறினார்.
ஊழல் ஒழிப்பு
தற்போதைய அரசு ஊழலினை ஒழிக்கப் பல வழிகளில் முயன்று வருகின்றது என்றும் ஆனால் அதனை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் அதில் தனக்கு மாற்றுக் கருத்தில்லை என்றார்.
இந்திய வங்கி அமைப்பு
"இந்தியாவின் வங்கிக் கணக்கு முறைக் கவலைப்படும் விதாக இருப்பதாக மக்கள் கூறுகையில் ஒட்டுமொத்தமாக, இந்தியாவின் வங்கி முறை தன் பார்வையில் வலுவாகவே உள்ளதாகக் கூறினார்.
வளர்ச்சி மதிப்பீடு
இந்தியாவின் வளர்ச்சி மற்றும் அடிப்படையில் நிறைய முன்னேற்றம் அடைந்து இருக்கும் போது ஏன் மதிப்பிட அரசு மறுத்துவிட்டது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு இதனை உலக மதிப்பீட்டு நிறுவனங்கள் செய்ய வேண்டும் ஏன் என்றால் இதனைத் தற்போதைய மோடி அரசே செய்துள்ளது என்றார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications