இந்தியாவில் ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் பல வழிகளில் பணிநீக்கம் செய்து வருகிறது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும், பல உயர் அதிகாரிகள் இதனை ஒப்புக்கொள்ளாமல் இருக்கின்றனர்.
இந்நிலையில் பணிநீக்கம் குறித்து முதலாவதாக அறிவித்த காக்னிசென்ட் நிறுவனம் தற்போது ஊழியர்களை வெளியேற்ற இல்லாத காரணத்தை எல்லாம் தேடி வெளியேற்றி வருகிறது.
அதிலும் பெண்களை மையமாகக் கொண்டு அவர்களின் இக்கட்டான சூழ்நிலையில் பணிநீக்கம் செய்து வருகிறது.
சவிதா குப்தா
காக்னிசென்ட் நிறுவனத்தின் கொல்கத்தா கிளையில் 2012ஆம் ஆண்டுப் பணிக்கு சேர்ந்த சவிதா குப்தா 2016ஆம் துவக்கத்தில் மகப்பேறு விடுப்பு எடுத்துக்கொண்டார். இதன் பின் அதே வருடத்தில் செப்டம்பர் மாதத்தில் பணிக்குச் சேர்ந்தார்.
வேலையைத் துவங்கிய சவிதாவிற்குத் தனது மேனேஜர் தனக்குச் சரியாக வேலை அளிக்காததை உணர்ந்தார். இதுகுறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
10 மணி வரை
இதன் பின் வேலைச் சரியாக அளிக்கப்பட்டாலும், அவர் தினமும் இரவு 10 மணி வரை பணியாற்ற வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் தள்ளப்பட்டார்.
பணிநேரத்தை மாற்றக் கோரியபோது சவிதா பென்ச்-க்குத் தள்ளப்பட்டார்.
பணிநீக்கம்
இந்நிலையில் ஜனவரி 3, 2017ஆம் தேதி சவிதா குப்தா-வை காக்னிசென்ட் நிர்வாகம் தனது பணியை ராஜினாமா செய்யக் கோரியது.
இதற்குக் காரணமாக அவர் "flexible" ஆகப் பணியாற்ற முடியாததைச் சுட்டிக்காட்டியது காக்னிசென்ட்.
மகப்பேறு விடுப்பு
இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு இடங்களில் இருக்கும் காக்னிசென்ட் நிறுவன கிளைகளில் மகப்பேறு விடுப்பு எடுத்துக்கொண்ட பெண் ஊழியர்கள் இந்நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.
வெறும் லாபத்திற்காகவும், வருவாய் கணக்கிற்காகவும் பெண் ஊழியர்களை இப்படி வெளியேற்றுவது தவறான செயல் என்று பல பெண்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு
கார்பரேட் நிறுவனங்கள் ஆண் பெண்களைச் சமமாகப் பார்க்கிறது என்ற கண்ணோட்டம் இருந்தாலும், உண்மையில் இந்தியாவில் பல கார்பரேட் நிறுவனங்கள் கர்பமாக இருக்கும் பெண்களை unproductive assets ஆக மட்டுமே பார்க்கிறது.
மேலும் மத்திய அரசு சமீபத்தில் மகப்பேறு விடுப்புக் காலத்தை அதிகரித்துள்ள நிலையில், இந்தக் கண்ணோட்டம் தற்போது இந்திய நிறுவனங்கள் மத்தியில் வலிமையாகியுள்ளது.
செயல்திறன்
சவிதா குப்தா மட்டும் அல்லாமல் யாமினி என்கிற காக்னிசென்ட் ஊழியர் மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு சேர்ந்த சில நாட்களில் அவரின் செயல்திறன் ஆய்வு அறிக்கையில் குறைவான ரேட்டிங் அளிக்கப்பட்டு நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
30 சதவீத ஊழியர்கள்
இந்திய ஐடி துறையில் எந்தத் துறையிலும் இல்லாத அளவிற்குச் சுமார் 30 சதவீத ஊழியர்கள் பெண்கள்.
தற்போது நடைபெறும் பணிநீக்கம் நடவடிக்கையில் இந்த அளவீடு 5 சதவீதம் வரை குறையும் என ஹெட் ஹண்டர்ஸ் இந்தியா ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெண்கள்
சவிதா குப்தா, யாமினி எனப் பல பெண்களைத் தேவையற்ற காரணங்களுக்காகக் காக்னிசென்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது, செய்யத் திட்டமிட்டு வருகிறது.
ஈசி டார்கெட்
இந்நிலையில் காக்னிசென்ட் பெண்களை மையமாக வைத்துப் பணிநீக்கம் செய்யப்படுவதற்குக் காரணம் அவர்கள் ஈசி டார்கெட் எனப் பல முன்னணி ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
பிற நிறுவனங்கள்
இதுவரை காக்னிசென்ட் பற்றி மட்டுமே தகவல் கிடைத்துள்ள நிலையில், பிற நிறுவனங்களில் ஐடி ஊழியர்கள் தேவையில்லாத காரணங்களுக்காகப் பணிநீக்கம் செய்யப்பட்டால் கருத்து பதிவிடும் தளத்தில் தகவலைப் பகிரவும்.
அரசு ஊழியர்களும் பணிநீக்கம்
அடித்து சொல்லும் டோனி சீபா


Click it and Unblock the Notifications