ஜெர்மன் நாட்டின் முன்னணி ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடீஸ் பென்ஸ்-இன் இந்திய கிளை வியாழக்கிழமை தனது புதிய தாயரிப்புகளின் விலையை 7 லட்சம் ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளதை அறிவித்துள்ளது.
தற்போது ஷோரூம்களில் இருக்கும் விலையை விட இப்புதிய தயாரிப்புகளின் விலை குறைவாக இருப்பதற்கு மோடி அறிவித்த திட்டம் பெரிய அளவில் உதவியுள்ளது.
மேக் இன் இந்தியா
இந்தியாவில் உற்பத்தியும், ஏற்றுமதியையும் அதிகரிக்க மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு சலுகைகளுடன் மேக் இன் இந்தியா திட்டத்தை அறிவித்தது.
இதன் பின் தற்போது ஜிஎஸ்டி மூலம் ஏற்பட்ட வரிமாற்றத்தின் வாயிலாக இந்தியா ஆடம்பர கார் ரகத்தில் இருந்த பென்ஸ் கார் விலை தற்போது 7 லட்சம் ரூபாய் வரை குறைந்துள்ளது.
பென்ஸ் மாடல்கள்
இந்நிறுவனம் இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் சிஎல்ஏ, ஜிஎல்ஏ, சி கிளாஸ், ஈ கிளாஸ், எஸ் கிளாஸ், ஜிஎல்சி, ஜிஎல்ஈ, ஜிஎல்எஸ் மற்றும் மேபேச் ஆகிய மாடல்களைத் தயாரித்துள்ளது.
இந்த ரகக் கார்கள் அனைத்தும் தற்போது விலை குறைந்துள்ளது.
விலை சரிவு
தற்போதைய நிலையில் அனைத்து இந்திய தயாரிப்பு கார்களுக்குச் சராசரியாக 4 சதவீதம் அளவில் விலை குறைப்பை அறிவித்துள்ளோம். ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு முன்பு புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சலுகையும் அளிப்பதாக மெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது.
2 முதல் 9 வரை
தற்போதுள்ள வரி விதிமுறைகள் படியும், மாநில வரி அளவுகளைக் கணக்கிட்டு 2 முதல் 9 சதவீதம் வரையிலான விலை சலுகையை அளிக்க முடிவு செய்துள்ளோம்.
ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி வரிச் சட்டத்தில் எஸ்யூவி கார்களுக்கு அதிகப்படியான 28 சதவீதம் வரி, 1 சதவீதம் செஸ், மற்றும் சிறிய பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு 3 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பெரிய மற்றும் ஆடம்பர கார்களுக்கு 15 சதவீதம் வரி விதிக்கவும் ஜிஎஸ்டி கவுன்சில் நிர்ணயம் செய்துள்ளது.
அட!
புதிய வசதி..!
ஹெல்த் இன்சூரன்ஸ்
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications