மத்திய அரசு ஜூலை 1ஆம் தேதி ஜிஎஸ்டி என அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் செய்ய அனைத்துப் பணிகளையும் செய்து வரும் நிலையில் மக்களின் தனிநபர் நிதியியல் சேவைகளின் கட்டணம் அதிகளவில் உயர உள்ளது.
வங்கி சேவை, இன்சூரன்ஸ் மற்றும் முதலீடுகளாகக் கருதப்படும் ரியல் எஸ்டேட், மியூச்சுவல் பண்ட் ஆகியவற்றுக்குத் தற்போது 15 சதவீத வரியாக இருக்கும் நிலையில் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் இது 3 சதவீதம் உயர்ந்து 18 சதவீதமாக அதிகரிக்க உள்ளது.
ஜிஎஸ்டி மற்றும் இன்சூரன்ஸ்
பொதுவாக இன்சூரன்ஸில் 3 வகையான இன்சூரன்ஸ் உள்ளது. டேம் இன்சூரன்ஸ், யூலிப் மற்றும் எண்டோவ்மென்ட் திட்டங்கள். இந்த 3 திட்டங்களுக்குச் சேவை வரி ஒரே மாதிரியாக விதிக்கப்படுவதில்லை என்பதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்சூரன்ஸ் பாலிசிக்கான பிரீமீயமத்தில் 2 பகுதிகள் உண்டு, ஒன்று ரிஸ்க் கவரேஜ் மற்றொன்று சேமிப்பு. இதில் சேவை வரி ரிஸ்க் கவரேஜ் மட்டும் தான் விதிக்கப்படுகிறது.
பல விதமான பாலிசிகள்
ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் இன்சூரன்ஸ் திட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.
1. ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் நீங்கள் செலுத்தும் பிரீமியம் தொகையில் முதலீடு அல்லது சேமிப்புக்கு எடுத்துக்கொள்ளப்படும் தொகை குறைக்கப்படலாம்.
2. ஒற்றை முறை முதலீட்டில் இருக்கும் இன்சூரன்ஸ் திட்டங்களுக்கு 10 சதவீதம் கட்டணமாகப் பிடித்துக்கொள்ளப்படும்.
மற்ற திட்டங்கள்
3. பிற திட்டங்களில் முதல் வருட பிரிமியத்தில் 25 சதவீதமும், அடுத்த வருடங்களில் 12.5 சதவீதம் என்ற அளவிலான தொகைய முதலீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
இந்நிலையில் எண்டோவ்மென்ட் திட்டத்தில் 100 ரூபாய் பிரிமியம் என்றால் 25 ரூபாய் முதலீட்டு எடுத்துக்கொண்டு 4.5 ரூபாய் என்பது ஜிஎஸ்டி-க்கான வரியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
4. நீங்கள் செலுத்தும் மொத்த பணமும் ரிஸ்க் கவரேஜ்-க்கானது என்றால் மொத்த பிரிமீயம் தொகைக்கும் ஜிஎஸ்டி-யின் 18 சதவீத வரி விதிக்கப்பட உள்ளது.
இதன் மூலம் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் டேம் மற்றும் எண்டோவ்மென்ட் திட்டங்களில் அதிகளவிலான பணத்தை ஜிஎஸ்டி வரிக்கு இழக்கப் போகிறோம்.
கார், ஹெல்த், மற்றும் லைப் இன்சூரன்ஸ்
ஜிஎஸ்டி அமலாக்கத்தால் ஏற்படும் வரி மாற்றம் கார், ஹெல்த், மற்றும் லைப் இன்சூரன்ஸ் அல்லாத இன்சூரன்ஸ் திட்டங்கள் என அனைத்தும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைவருக்கு
மேலும் இந்த வரி மாற்றம் தற்போது இன்சூரன்ஸ் வைத்துள்ளவர்களுக்குச் சரி, புதிதாகத் துவங்குபவர்களுக்கும் பொருந்தும்.
பாதிப்பு
உதாரணமாக நீங்கள் செலுத்தும் டேம்பிளான் திட்டத்திற்கான பிரிமியம் (வரியில்லாமல்) 10,000 என்றால். தற்போது இருக்கும் வரியின் 11,500 ரூபாய் செலுத்துவீர்கள், ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் இது 11,800 ரூபாய். அதாவது 300 ரூபாய் அதிகமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications