இந்தியாவிற்கு பெரிய தலைவலியாக மாறிய வராகடன்.. எந்த வங்கி எவ்வளவு வைத்துள்ளது..?!

பொருளாதாரம் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கச் சிறந்த வங்கி அமைப்பு தேவை. ஆனால் பல மடங்கு வராகடன், செயல்படா கடன் கணக்குகள் வங்கிகளில் இருப்பது நாட்டின் வளர்ச்சிக்கும் பெறும் தடையாக உள்ளது.

எனவே மார்ச் மாதம் காலாண்டு வரை செயல்படாத வாரகடன் அதிகம் வைத்துள்ள வங்களின் பட்டியலை இங்குப் பார்ப்போம்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அளித்துள்ள மொத்த கடன் தொகையில் 22.39 சதவீதம் அதாவது 35,098.25 கோடி ரூபாய் வராகடன் உள்ளது.

மார்ச் மாத காலாண்டு அறிக்கையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 646.66 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. சென்ற ஆண்டு இதே காலண்டில் 936.19 கோடி ரூபாய் நிகர நட்டத்தைச் சந்தித்துள்ளதாக அறிவித்து இருந்தது.

 

ஐடிபிஐ வங்கி

ஐடிபிஐ வங்கி

ஐடிபிஐ வங்கி அளித்துள்ள மொத்த கடன் தொகையில் 21.25 சதவீதம் அதாவது 44,752.59 கோடி ரூபாய் வராகடனக உள்ளது.

இதே காலக் கட்டத்தில் சென்ற அண்டு 1,735.81 கோடி ரூபாய் நிகர நட்டம் அடைந்துள்ளதாக ஐடிபிஐ வங்கி அறிவித்துள்ளது.

 

சென்ட்ரல் வங்கி

சென்ட்ரல் வங்கி

சென்ட்ரல் வங்கி வழங்கியுள்ள மொத்த கடன் தொகையில் 17.81 சதவீதம் அதாவது 27,250,.33 கோடி ரூபாய் வராகடனாக உள்ளது.

2017 மார்ச் 31-ம் தேதியோடு முடிந்த காலாண்டில் 591.77 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாகவும், இதே காலக் கட்டத்தில் சென்ற ஆண்டு 898.04 கோடி ரூபாய் நிகர நட்டம் அடைந்துள்ளதாகவும் சென்ட்ரல் வங்கி அறிவித்துள்ளது.

 

பாங்க் ஆப் இந்தியா

பாங்க் ஆப் இந்தியா

பாங்க் ஆப் இந்தியா வழங்கியுள்ள மொத்த கடன் தொகையில் 13.22 சதவீதம் அதாவது 52,044.52 கோடி ரூபாய் வராகடனாக உள்ளது.

மார்ச் மாதம் காலாண்டில் பாங்க் ஆப் இந்தியா 10.46 பில்லியன் நிகர நட்டம் அடைந்துள்ளதாகவும், இதுவே சென்ற ஆண்டு 35.87 பில்லியன் ரூபாய்களாக இருந்தது.

 

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி வழங்கிய மொத்த கடன் தொகையில் 12.53 சதவீதம் அதாவது 55,370.45 கோடி ரூபாய் வராகடனக உள்ளது. மார்ச் மாத காலாண்டு அறிக்கையில் 22,415 கோடி ரூபாய் நிகர நட்டம் அடைந்தாதாக அறிவித்துள்ளது. சென்ற ஆண்டு இதே நேரத்தில் 42.252 கோடி நட்டம் அடைந்ததாகவும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ்

ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ்

ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் நிறுவனம் வழங்கிய கடன் தொகையில் 13.73 சதவீதம் அதாவது 22,859.27 கோடி ரூபாய் வராகடனாக உள்ளது.

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டு அறிக்கையில் மொத்தமாக 1,218.01 கோடி நட்டம் அடைந்துள்ளதாகவும், இதே காலக் கட்டத்தில் சென்ற ஆண்டு 21.62 கோடி நிகர லாபம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

தேனா வங்கி

தேனா வங்கி

தேனா வங்கி வளங்கி அளித்துள்ள மொத்த கடன் மதிப்பில் 16.27 சதவீதம் அதாவது 12,618.73 கோடி ரூபாய் வராகடனாக வைத்துள்ளது.

2016 மார்ச் காலாண்டில் 326 கோடி ரூபாயாக இருந்த நட்டம் 2017-ம் ஆண்டு 575 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகத் தேனா வங்கி அறிவித்துள்ளது.

 

கனரா வங்கி

கனரா வங்கி

கனரா வங்கி அளித்துள்ள மொத்த கடன் தொகையில் 9.63 சதவீதம் அதாவது 34,202.04 கோடி ரூபாய் வராகடனாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

2016-ம் ஆண்டு மார்ச் மாத காலாண்டில் 39.05 பில்லியன் ரூபாய் நட்டம் அடைந்த கனரா வங்கி 2017-ம் ஆண்டு 2.14 பில்லியன் ரூபாய் லாபம் அடைந்துள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+