பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர் வங்கி கணக்குகளில் இருந்து பணம் எடுப்பது மற்றும் கணக்கில் வைப்பது போன்ற பணப் பரிவர்த்தனைகளை வருமானவரித் துறை கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், நிதி சட்டத்தின் பிரிவு 269எஸ்டி கீழ் 2 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமான தொகையை ரொக்கப் பரிவர்த்தனையாகச் செய்வதற்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

இந்தத் தடையின் கீழ் ஒரு நாளைக்கு ஒருவர் 2 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக வங்கியின் மூலம் அல்லது பிற சேவைகளில் ரொக்கப்பணமாகப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டால் அவர்களுக்குக் கடும் அபராதம் விதிக்கப்படும்.
யாருக்கு இந்த நிதி சட்டம் 269எஸ்டி பொருந்தும்?
ஒருவரிடம் இருந்து 2 லட்சம் ரூபாயினை ஒருவர் பெறும் போது அந்தத் தொகையினை யார் பெறுகிறார்களோ அவர்கள் இந்த 100 சதவீதம் அபராதத்தைச் செலுத்த வேண்டும். 269எஸ்டி சட்டம் தனிநபர்களுக்கு மற்றும் தனியார் நிறுவனங்களுக்குப் பொருந்தும்.
எந்தப் பரிவர்த்தனைகளுக்கு எல்லாம் இந்த 269எஸ்டி சட்டம் பொருந்தாது?
பொது மற்று தனியார் துறை வங்கிகள், அரசுத் துறைகள், தபால் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு எல்லாம் இந்தச் சட்டம் பொருந்தாது.

கருப்புப் பணம்
கருப்புப் பணம், பினாமி அல்லது அது போன்ற பரிவர்த்தனைகள் குறித்த விவரங்களை வருமான துறைக்கு அளிக்க வேண்டும் என்றால் [email protected] என்ற மின்னஞ்சலுக்குத் தகவல் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications