சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி வருகின்ற ஜூலை 1 -ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கின்றது. இப்படிப்பட்ட சூழலில் பல் வணிகர்கள் மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி முறைக்கு மாற அதிகச் செலவு ஆகுமோ என்ற குழப்பத்தில் உள்ளனர்.
இப்படிப்பட்ட சூழலில் பதிவு கட்டணம், மென்பொருள் முதல் பயிற்சி வரை எவ்வளவு செலவு ஆகும் என்று இங்குப் பார்ப்போம்.
ஜிஎஸ்டி வரி முறைக்குப் பதிவு செய்யக் கட்டணம் எவ்வளவு?
ஜிஎஸ்டி வரி முறைக்கு மதிவு செய்ய 2,500 ரூபாய்க் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
ஜிஎஸ்டி மென்பொருள்
ஜிஎஸ்டி மென்பொருள் வாங்க வேண்டும் என்றால் ஒற்றைப் பயனருக்கு 8,500 முதல் 18,000 ரூபாய் வரை செலவாகும். இதுவே பல பயனர் மென்பொருள் என்றால் 54,000 ரூபாய்த் தேவைப்படும்.
கிளவுட் சார்ந்த ஜிஎஸ்டி
கிளவுட் சார்ந்த ஜிஎஸ்டி சேவைப் பெற வேண்டும் என்றால் மாதம் 100 ரூபாய் செலவு ஆகும்.
இலவச பயிற்சி
ஜிஎஸ்டி வரி குறித்து இலவச பயிற்சிகளும் வழங்கப்படுகின்றது.
கட்டண பயிற்சி
இலவச பயிற்சி மட்டும் இல்லாமல் கட்டண செலுத்தி உங்களுக்குப் பயிற்சி தேவை என்றால் 10,000 ரூபாய் முதல் 15,000 வரை செலவாகும்.
இங்குக் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் கிளியர் டேக்ஸ், டேலி சொல்யூஷன்ஸ், ஜிஎஸ்டி சமாதான் ஆகிய தளங்களில் இருந்து பெறப்பட்டவை ஆகும்.


Click it and Unblock the Notifications