ஜிஎஸ்டி வரியால் மக்களுக்கு அடித்தது யோகம்.. டிவி, ஏசி விலையில் 40 சதவீதம் வரை தள்ளுபடி!

நாட்டில் பல பகுதிகள் வெப்பத்தின் பிடியில் இருப்பதால், பரவலான மின்னணு பொருட்களைச் சில்லறை விற்பனையாளர்கள் தள்ளுபடி விலையில் விற்று வருகின்றனர்.

எனினும் இப்போது சிறு சில்லைரை விற்பனையாளர்கள் ஜிஎஸ்டி ஆமலுக்கு வருவதாலும் அதனால் ஏற்படும் வரிச் சிக்கல்களைத் தவிர்க்கும் விதமாக டீலர்ககள் குறைந்த விலையில் மின்னணு பொருட்களை வாங்கி வருகின்றனர்.

ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்துவிட்டால் பழைய சரக்கு இருப்பு இருக்கும் போது சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் விலை குறைக்க வேண்டிய நிலை வரும் என்பதாலும் 40 சதவீதம் வரை சில்லறை விற்பனையாளர்கள் மின்னணு பொருட்களைச் சலுகை விலையில் விற்பனை செய்கின்றனர்.

ஆஃபரில் கிடைக்கும் பொருட்கள்

ஆஃபரில் கிடைக்கும் பொருட்கள்

இப்படி விலை குறைந்த மின்னணு பொருட்கள் விலையில் ஏசி, ரெப்ரிஜ்ரேட்டர்கள், டிவி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகளவில் குறைந்துள்ளன.

40 சதவீத ச்லௌகை

40 சதவீத ச்லௌகை

பொதுவாகச் சில்லறை விற்பனையாளர்கள் 10 முதல் 15 சதவீதம் வரையில் தான் சலுகைகளை வழங்குவார்கள். ஆனால் ஜிஎஸ்டி அறிமுகத்தால் கூடுதலாக 60 முதல் 40 சதவீதம் வரை சலுகைகள் கிடைக்கப்பட்டுள்ளன.

பிராண்டு பொருட்கள்

பிராண்டு பொருட்கள்

பிராண்டு நிறுவனங்களான சேம்சங், ஹிட்டாச்சி, பேனாசோனிக், வீடியோகான் உள்ளிட்ட நிறுவனங்களின் மின்னணு பொருட்களுக்கும் ஆஃபர் அதிக அளவில் அளிக்கப்பட்டு வருகின்றது.

40 சதவீத மத்திய ஜிஎஸ்டி வரி

40 சதவீத மத்திய ஜிஎஸ்டி வரி

ரீடெய்லர்களால் மத்திய அரசு விதித்துள்ள கூடுதல் 40 சதவீத மத்திய ஜிஎஸ்டி வரியை ஏற்க முடியாத என்பதால் கொள்முதல் செய்து வைத்துள்ள மொத்த பொருட்களையும் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

கிரெடிட் அளவு

கிரெடிட் அளவு

வரிக் கிரெடிட் அளவை அதிகரித்துள்ளது நல்லது என்றாலும் ரிடெய்லர்களால் 40 சதவீத வரியை ஏற்க முடியாது, அதனால் அவர்கள் கொள்முதல் செய்துள்ள பொருட்களை வேகமாக விற்றுத் தீர்க்கவே என்னுவார்கள் என்று விஜய் சேல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நிலேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

என்ன தான் சலுகை விலையில் பொருட்களை விற்பனை செய்து வந்தாலும் ஜூலை மாத விற்பனையும் அதிகளவில் பாதிக்கும் என்று குப்தா கூறினார்.

 

பெரிய ரீடெய்ல் நிறுவனங்களுக்குச் சிக்கல்

பெரிய ரீடெய்ல் நிறுவனங்களுக்குச் சிக்கல்

பெரிய அளவில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மின்னணு பொருட்களைக் கொள்முதல் செய்து வைத்துள்ள ரீடெய்ல் நிறுவனங்களும் எப்படி விற்பனை செய்வது என்று விழி பிதுங்கி உள்ளன.

ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால் விலை உயர வாய்ப்பு

ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால் விலை உயர வாய்ப்பு

எவ்வளவு பொருட்களை விற்க முடியுமோ அந்த அளவிற்கு விற்றுத் தீர்க்க வேண்டும் என்றும், ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு 3.5 சதவீதம் வரை பொருட்களின் விலை உயரும் என்று கூரப்படுகின்றது. என்னதான் பொருட்களின் விலை உயர்ந்தாலும் எல்லா மாநிலத்திலும் ஒரே விலை இருக்காது.

சுங்க வரி

சுங்க வரி

மும்பையைப் பொருத்தவரை வரி மகாராஷ்டிரா மாநில அரசு அதிகச் சுங்க வரி விதிக்கவில்லை. ஆனால் கர்நாடகா, ஆந்திரா பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சுங்க வரி அதிகம் என்பதால் மின்னணு பொருட்களின் விலை அதிகமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+