ஜிஎஸ்டி அறிமுகத்தால் கார் விலையில் ரூ. 40,000 வரை சலுகை..!

சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி ஜூலை 1-ம் தேதி அமலுக்கு வரும் முன்பு மாருதி சுசூகி, ஹூண்டாய், ஹோண்டா, டாடா மோட்டார்ஸ், ஃபோர்ட் மற்றும் வோல்ஸ்வேகன் உள்ளிட்ட நிறுவனங்கள் பல மாடல்களில் சலுகைகளை அறிவித்துள்ளனர்.

பல இடங்களில் சலுகை விலை கார் டீலர்கள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகின்றது. இப்படிக் கார் டீலர்கள் வழங்கப்படும் சலுகையில் பை பேக் ஆஃபர், மற்றும் டிஸ்கவுண்ட் முறைகளே அதிகம் ஆகும்.

ஆடம்பர கார் நிறுவனங்கள் மெர்சிடிஸ் பென்ஸ், BMW, ஆடி மற்றும் ஜாகுவார் லாண்ட் ரோவர் உள்ளிட்டவை எல்லாம் ஜிஎஸ்டி அறிமுகத்திற்குப் பிறகு நல்ல பயன் பெறுவார்கள். அதனால் இப்போதே இந்த நிறுவனங்கள் தங்களது கார் விலையி பல சலுகைகளை அளித்து வருகின்றன.

எனவே நாம் இங்குப் பிராண்டு வாரியாக அளிக்கப்படவுள்ள சலுகைகளைப் பார்ப்போம் இது டீலர்கள், நீங்கள் இருக்கும் நகரத்தைப் பொருத்து மாரும்.

மாருதி சூசிகி

மாருதி சூசிகி

ஆல்டோ 800, ஆல்டோ கே 10, ஸ்விஃப்ட், வேகன் ஆர், செலீரியா மற்றும் எர்டிகா ஆகிய கார்களுக்கு மாருதி சூசிகி நிறுவனம் பல சலுகைகளை அறிவித்துள்ளது. அதனால் விலையில் 10,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை சலுகைகள் கிடைக்கும். இதே போன்று கார் எக்ஸ்சேஞ் செய்யும் போது சில மாடல் கார்களுக்கு மட்டும் 27,000 ரூபாய் வரை சலுகைகள் கிடைக்கும்.

ஹூண்டாய்

ஹூண்டாய்

ஹூண்டாய் கார் டீலர்கள் இயான், 2017 கிராண்டு ஐ10, எக்சொண்ட், எலைட் 120 மற்றும் வெர்னா கார்களுக்கு 15,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை சலுகைகளை அளித்து வருகின்றனர். சாண்டா ஃபீ மற்றும் கிரீடா கார்களுக்கு எக்சேஞ்ச் ஆஃபர்கள் அளிப்பதில்லை.

ஹோண்டா

ஹோண்டா

பிரியோ, அமேஸ், ஜாஸ் உள்ளிட்ட கார்களுக்கு ஹோண்டா சலுகைகளை அளிக்கின்றது. அதே நேரம் WRV மற்றும் ஹோண்டா சிட்டி ஆகிய கார்களுக்குச் சலுகைகள் ஏதும் இல்லை. டீலர்கள் கார் எக்ஸ்சேஞ் செய்யும் போது 20,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை சலுகைகளை அளிக்கின்றனர்.

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் டீலர்கள் போல்ட், ஜெஸ்ட் ஆகிய கார்களுக்கு 20,000 ரூபாய் முதல் 25,000 வரையிலும் சலுகைகள் வழங்கியுள்ளனர். இதுவே புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட டைகோர் மற்றும் டைகோ ஆகிய கார்களுக்கு எந்தச் சலுகைகளும் இல்லை.

ஃபோர்டு

ஃபோர்டு

ஃபோர்டு டீலர்கள் ஃபிகோ, ஏஸ்பைர் மற்றும் எகோஸ்போர்ட் ஆகிய மாடல்களுக்கு 10,000 ரூபாய் வரை சலுகைகளும், எக்ஸ்சேஞ் போனசாக 15,000 ரூபாயும் அளிக்கின்றனர்.

வோக்ஸ்வாகன்

வோக்ஸ்வாகன்

போலோ, அமீ மற்றும் வெண்டோ ஆகிய மாடல்களில் வோக்ஸ்வாகன் 30,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் சலுகைகள் அளிக்கின்றனர். இதுவே புதிய மாடலான டைகுவானில் தள்ளுபடி இல்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+