நாட்டின் மறைமுக வரியின் கீழ் இருக்கும் பலதரப்பட்ட வரிகளை முழுமையாக நீக்கிவிட்டு ஒரு நாடு, ஒரு வரி என்ற அமைப்பில் சரக்கு மற்றும் சேவை வரி வருகிற ஜூலை 1ஆம் நாடு முழுவதும் அமலாக்கம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் வருமான வரித்துறை புதிய முயற்சியை எடுத்து வந்துள்ளது. இது உண்மையிலேயே சிறப்பான திட்டம் என பல உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அப்படி என்னப்பா புது திட்டம்..?
புதிய திட்டம்..
வருமான வரித்துறை, அதிகார எல்லையில்லா மதிப்பீடு (Jurisdiction-Free Assessment) என்ற புதிய சட்ட வரைமுறையை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் நாடு முழுவதும் ஓரே வரி துறைத் தான், பிராத்திய அடிப்படையில் இருக்கும் அனைத்து அலுவலங்களும் நீக்கப்பட்டு ஒரே கட்டுப்பாடில் இயங்க கூடிய ஒரு வரித்துறையாக இருக்க வேண்டும் என ஜிஎஸ்டியை முன்மாதிரியாக கொண்டு இத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
உதாரணம்
இதன் பிடி மும்பையில் இருக்கும் வரி செலுத்தும் நபரை, பூனேவில் இருக்கும் வருமான வரித்துறை அதிகாரி அவர் கணக்கை நேரடியாக ஆய்வு செய்யலாம். இதன் மூலம் மக்களை வருமான வரித்துறை அதிகாரிகள் நேரடியாக சந்திப்பதை தவிர்க முடியும். இதுமட்டும் அல்லாமல் லஞ்சத்தை முழுமையாக ஒழிக்க முடியும்.
மேலும் வருமானம் குறித்த ஆய்வுகள் பணி மிகவும் விரைவாக முடிக்க முடியும் எனவும் வருமான வரித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
சட்டம்
இதை அமலாக்கம் செய்ய வேண்மெனில் வருமான வரி சட்டத்திலும் மாற்றம் செய்ய வேண்டும். தற்போது இருக்கும் விதிமுறைகள் அனைத்தும் பிராந்திய அடிப்படையிலாக மட்டுமே உள்ளது.
இதனை மாற்றி மொத்த நாடும் ஒரே எல்லையாக கொண்டு வருமான வரித்துறை தனது ஆய்வை மற்றும் மதிப்பீட்டை செய்ய முடியும். இதன் மூலம் வருமான வரி துறையில் இருக்கும் லஞ்சத்தை முழுமையாக ஒழிக்க முடியும்.
CBDT அமைப்பு
இப்புதிய பரிந்துரையை மத்திய நேரடி வரி அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
தற்போது நடைமுறையில் இருக்கும் இந்தியாவில் இருக்கும் மக்கள் அனைவரும் மின்னணு முறையில் தாக்கல் செய்யப்படும் வருமான வரி ரிட்டன்ஸ் அனைத்தும் பெங்களுரில் இருக்கும் CPC அலுவலகத்திற்கு செல்வதை போலவே இப்புதிய திட்டமும் செயல்படும்.
பல முன்னேற்றம்..
இப்புதிய சட்ட விதிகள் மாற்றத்தின் மூலம் பல வரி மோசடிகள், ஊழல்வாதிகளை கண்டுப்பிடிப்பது மட்டும் அல்லாமல் வரைவாக ஆய்வுகள் முடிக்கப்படும்.
இது கண்டிப்பாக வரவேற்கத்தக்கது. ஆனால் வருமான வரித்துறை அரசியல் கட்சிகள், மத்திய அரசு தலையீடு இல்லாமல் இயங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications