66 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் திடீர் மாற்றம்.. அருண் ஜேட்லி அறிவிப்பு..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

இன்று நடந்து முடிந்த ஜிஎஸ்டி கவுன்சில் -இன் 16வது கூட்டத்தில் 66 பொருட்களுக்கான வரியை ஜிஎஸ்டி குழு மறுஆய்வு செய்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சந்தை மற்றும் தொழிற்துறையிடும் கிடைத்த பரிந்துரைகள் மூலம் இந்த 66 பொருட்களுக்கான வரியை மாற்றியுள்ளோம் எனக் கூட்டம் முடிந்த பின் ஜேட்லி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பரிந்துரையின் படி வரி மாற்றம் செய்வது குறித்து விவாதிக்கப்பட்ட 133 பொருட்களில் சுமார் 66 பொருடக்களின் விலையை மாற்றியுள்ளோம் என அருண் ஜேட்லி தெரிவித்தார்.

வரிமாற்றம் செய்யப்பட்ட முக்கியப் பொருட்கள் மற்றும் அதன் விபரங்கள் உங்களுக்காக..

முந்திரி

இந்தியாவில் ஆடம்பர உணவுப்பொருட்களில் ஒன்றாக இருக்கும் முந்திரி-யின் மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

பாக்கெட் உணவுகள்

பாக்கெட் செய்யப்பட்ட பழங்கள், காய்கறிகள், ஊறுகாய், டாப்பிங்க்ஸ், உடனடி உணவுகள் மற்றும் சாஸ் வகைகள் இதற்கு முன் 18 சதவீதம் வரை வரிவிதிக்கப்பட்ட நிலையின் இன்று நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தின் முடிவில் இதன் வரியை 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அகர்பத்தி

மேலும் அகர்பத்தி மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மருந்து பொருட்கள்

டென்டல் வேக்ஸ் 28 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இன்சுலின் 12% இருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

 

பிளாஸ்டிக்

பிளாஸ்டிக் மணிகள் 28% இருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் டார்புலின் 28% இருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

 

புத்தகம்

ஸ்கூல் பேக்ஸ் 28% இருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

Exercise புத்தகம் 18% இருந்து 12% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

கலரிங் புத்தகம் 12% இருந்து 0% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

 

பிற பொருட்கள்

கான்கிரீட் பைப், டிராக்டர் உபகரணங்கள், கம்பியூட்டர் பிரிண்டர் ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்ட 28சதவீத வரியை ஜிஎஸ்டி கவுன்சில் 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் சமையல் அறை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 18 சதவீக வரி 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

 

எண்டர்டெயின்மென்ட் டாக்ஸ்

திரைப்பட டிக்கெட்-களில் இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 100 ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் டிக்கெட்-க்கு 18 சதவீத வரியும், 100க்கு அதிகமாக இருக்கும் டிக்கெட்க்கு 28 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

தற்போது மாநில அரசுகள் 28-110 சதவீதம் வரை எண்டர்டெயின்மென்ட் டாக்ஸ் விதிப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பல மாநிலங்கள் தனது பிராந்திய மாநில மொழி படங்களுக்கு முழுமையான வரிச் சலுகை அளிக்கிறது. ஜிஎஸ்டி-யில் முழுச் சலுகை கிடையாது.

இதனால் மாநிலங்கள் டிபிடி வாயிலாக (Direct Benifit Transfer) இதற்கான பணத்தைத் திருப்பெற்றுக்கொள்ளலாம் என அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

 

சம்பளம்

டெக்ஸ்டைல், வைர உற்பத்தி செய்யும் துறை சார்ந்த ஊழியர்கள் பெறும் சம்பளம் மீது விதிக்கப்படும் 18 சதவீதம் வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அடுத்தக் கூட்டம்..

இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில்-இன் அடுத்தக் கூட்டம் ஜூன் 18ஆம் தேதி நடக்க உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

GST Council revises rates for 66 items

GST Council revises rates for 66 items - Tamil Goodreturns | 66 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் திடீர் மாற்றம்.. அருண் ஜேட்லி அறிவிப்பு..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns