இந்திய ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் பெறும் பிரச்சனைகளாக உள்ள 8 லட்சம் கோடி வரா கடன் பிரச்சனைகளுக்கு இந்த 12 கணக்குகள் தான் காரணம் என்று வாரா கடனில் 25 சதவீதம் இவர்களிடம் மட்டும் தான் இருக்கின்றது என்று கூறியுள்ளது.
வரா கடன் பற்றி அறிவிப்பை வெளியிட்ட போதிலும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா யார் அந்த 12 கணக்குகளுக்குச் சொந்தக்காரர்கள் என்று விவரத்தை அளிக்கவில்லை.
அதிக வரா கடன் உள்ள வங்கித் துறை
வங்கித் துறையில் வராக் கடனாக உள்ள 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 6 லட்சம் கோடி ரூபாய் பொதுத் துறை வங்கிகளில் தான் உள்ளது.
ஆர்பிஐ தீர்மானம்
வரா கடன் அதிகம் வைத்துள்ள கணக்குகள் மற்றும் அதிக வரா கடன் வைத்துள்ள வங்கிகளுக்காக ஆர்பிஐ சில தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
எப்படி வரா கடனை ஆர்பிஐ கண்காணிக்கின்றது?
ஆர்பிஐ உறுவாக்கியுள்ள ஆலோசனைக் குழு வராக் கடன் அதிகம் உள்ள கணக்குகளுக்கும் வங்கிகளுக்குக் குறியீடு ஒன்ற அளித்து, அதனைப் பயன்படுத்தி 5,000 கோடிகளுக்கு அதிகமாகக் கடன் வாங்கியுள்ள அனைத்து வங்கி கணக்குகளுக்கும் 60 சதவீதத்திற்கு அதிகமாக வராக் கடன் செலுத்த வைத்துள்ள வங்கி கணக்குகளின் பட்டியலை ஆர்பிஐ எடுத்துள்ளது.
முக்கியமான 12 வங்கி கணக்குகள்
அந்த ஆய்வில் கிடைத்த தகவலின் படி 12 வங்கி கணக்குகளில் மட்டும் 25 சதவீதம் மதிப்பிலான வரா கடன் உள்ளதாகவும் ஆர்பிஐ கூறியுள்ளது.
ஆர்பிஐ பரிந்துரை
ரிசர்வ் வங்கியின் ஐஏசி பரிந்துரைகளின் படி அதிகம் வரா கடன் உள்ள கணக்குகளின் விவரங்களை ஐபிசி திவால் சட்டத்தின் நடவடிக்கை எடுக்க மத்திய வங்கியிடம் மனு அளிக்க வேண்டும்.
இது போன்ற சந்தர்ப்பங்களில் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) ஒப்பந்தம் பெற்று அந்தக் கணக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கும்.


Click it and Unblock the Notifications