ஜிஎஸ்டி வரி விகிதம் முதலில் அறிவிக்கப்பட்டதை அடுத்து எழுந்த சர்ச்சை மற்றும் மாநில அரசுகள் கோரிக்கை போன்றவற்றைப் பரிசீலனை செய்து சில பொருட்கள் மீது மட்டும் வரி குறைக்கப்பட்டுள்ளது.
அப்படி நாம் அன்றாட வாழ்கையில் பயன்படுத்தி வரும் எந்தெந்த பொருட்களின் மீது எல்லாம் வரி விகிதம் முன்பு அறிவிக்கப்பட்டதில் இருந்து குறைக்கப்பட்டுள்ளது என்று இங்குப் பார்ப்போம்.
சிறு தானியங்கள்
முதலில் ஜிஎஸ்டி வரி விகிதம் அறிவிக்கப்பட்ட போது சிறு தானியங்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டு இருந்தது. அது இப்போது 0% ஆக வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உலர் பழங்கள்
ஓடு நீக்கப்படாத முந்திரி, முந்திரிப் பருப்பு மற்றும் பிற உலர் பழங்கள் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பனை வெல்லம்
பனை வெல்லம் மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து மொத்தமாக 0% ஆக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
காய் கறிகள்
ஜாம், ஜெல்லி முருபபா சட்னி, ஊறுகாய் மற்றும் காய்கறிகள், பழங்கள், கொட்டைகள் மற்றும் தாவரங்களின் பகுதிகள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கும் பொருட்களுக்கு 18 சதவீதமாக இருந்த வரி 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
சுவையூட்டிகள்
கெட்ச்அப் மற்றும் சுவையூட்டிகள் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பாசி பருப்பு
பாசி பருப்பு போன்ற பருப்பு வகைப் பொருட்கள் மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்கள்
ஐஸ்கிரீம், சர்பத், பழரசங்கள் மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது.
உப்பு
வீட்டில் தினசரி உணவில் பயன்படுத்தும் உணவிற்கு வித்திருந்த 5 சதவீத வரி 0% ஆகக் குறைக்கப்பட்டது.
பையோ கேஸ்
சுற்றுச்சூழலினை பசுமையாகப் பார்த்துக்கொள்ள உதவும் பயோகேஸ் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
பீசா
சாலட், சாண்ட்விச், பீஸ்ஸா, பர்கர்கள், சால்ட் டிரஸ்ஸில் பயன்படுத்த கூடிய கலவைகள் மற்றும் கருவேப்பிள்ளை பேஸ்ட், இஞ்சி, பூண்டு பேஸ்ட் போன்ற பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கால்நடைகள்
நீங்கள் வீட்டில் வளர்க்கும் கால் நடைகள், நாய், பூனை போன்றவற்றுக்கான உணவுகள் மீதான் வரி 12 சதவீதத்தில் இருந்து 0% ஆகக் குறைக்கப்பட்டது.
மருந்துகள்
மருந்து பொருட்கள் மீதான வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைத்துள்ளனர்.
அகர்பத்திகள்
பூஜைக்குப் பயன்படுத்தும் அகர்பத்திகள் மற்றும் கற்பூரம் போன்ற பொருட்கள் மீதான வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைத்துள்ளனர்.
டூத்பேஸ்ட்
பற்களைச் சுத்தப்படுத்தும் பற்பசை போன்ற பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications