நாட்டின் முன்னணி மொபைல் வேலெட் நிறுவனமான பேடிஎம், டிஜிட்டல் கோல்டு என்ற பெயரில் தனது ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் தங்கத்தை ஏப்ரல் 27ஆம் தேதி விற்பனை செய்ய துவங்கியது.
இதில என்னப்பா இருக்கு.. இப்பெல்லாம் ஏகப்பட்ட நிறுவனங்கள் தங்க நகை, காசு எல்லாம் விக்கறாங்க..
நீங்கள் சொல்வது சரி தான், ஆனால் அனைத்து இடத்திலும் தரத்தில் சந்தேகம் இருக்கும். ஆனால் இங்கும் விற்பனை செய்யப்பட்டுவது அனைத்தும் 24 கேரட் தங்கம் தான்.
100 சதவீத வளர்ச்சி
ஏப்ரல் 27ஆம் தேதி விற்பனையை துவங்கிய பேடிஎம், ஒவ்வொரு மாதமும் விற்பனை அளவில் சுமார் 100 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்து வருவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் இந்த தளத்தில் நீங்கள் தங்கத்தை வாங்கும் செய்யலாம், விற்பனையும் செய்யலாம்.
வாடிக்கையாளர்
பேடிஎம் ஷாப்பிங் தளத்தில் தங்கத்தை வாங்குபவர் பெரும்பாலோனோர் 25-35 வயதுடையோர். இந்த இணையதளம் குறைவான மதிப்பீட்டில் தங்கம் வாங்குவோருக்கு அதிகளவில் வசதியாக இருக்கிறது.
மேலும் இன்றைய இளைஞர்கள் தெரியாத இடத்தில் தங்கத்தை வாங்கவும், தங்கத்தை சரியாக பரிசோதிக்க தெரியாத காரணத்தினாலும் இத்தகைய இணைய தளத்தை நாடுகின்றனர்.
1ரூபாய்க்கு
இங்கு நீங்கள் தங்கத்தை 1 ரூபாய்க்கு கூட வாங்கலாம், மேலும் நீங்கள் வாங்கப்படும் தங்கம் உங்கள் கணக்கின் பெயரில் MMTC நிறுவன வைப்பில் வைக்கப்படும். நீங்கள் தங்கமாக வாங்க வேண்டுமெனில் குறைந்தபட்சம் 1 கிராம் தங்கத்தை வாங்க வேண்டும்.
100 கிலோ
ஏப்ரல் 27ஆம் தேதி முதல் பேடிஎம் நிறுவனம் சுமார் 100 கிலோ தங்கத்தை டிஜிட்டல் முறையில் விற்பனை செய்துள்ளது.
வங்கி
இணையதளம் வாயிலாக பில் பேமெண்ட் சேவைகளை அளித்து வந்த பேடிஎம் நிறுவனம், சீனாவின் அலிபாபா நிறுவனத்தின் முதலீடு மூலம் புதிய சேவைகளை பலவற்றை கொண்டு வந்தது. இதில் ஆன்லைன் ஷாப்பிங், டிஜிட்டல் கோல்டு ஆகியவை இதில் அடங்கும்.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் பேமெண்ட்ஸ் வங்கி சேவையை தற்போது துவங்கி அசத்தியுள்ளது பேடிஎம்.
மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை
இந்தியாவின் 400 மில்லியன் இளைஞர் மக்கள் தொகையில், 61 சதவீதம் பேர் மட்டுமே இணையத்தில் உள்ளனர். இந்நிலையில் பேடிஎம் நிறுவனத்தில் மட்டும் சுமார் 225 மில்லியன் வாடிக்கையாளர்கள் தற்போது இணைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications