வருகின்ற ஜூலை 1 முதல் கட்டப்பட்டு வரும் வீடுகள் மீதான ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி 12 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகின்றது. அதனால் வீடுகளின் விலை உயர்ந்து விடும் என்று மக்கள் பயந்து வருகின்றனர்.
ஏற்கனவே தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் உங்களுக்காக இந்தக் கட்டுரையில் ஜிஎஸ்டி வரியால் வீடு வாங்கும் போது என்னவெல்லாம் மாற்றம் ஏற்படும், விலை உயருமா என்பதை எல்லாம் தொகுத்து அளிக்கின்றது. இதனைப் படித்துப் பயன்பெறுங்கள்.
சிஆர்இடிஎஐ உறுப்பினர்கள் புதிய வரி அமைப்பான ஜிஎஸ்டி அமலுக்கு வரும் போது நடுத்தர மற்றும் ஏழை மக்களின் கனவு வீட்டிற்கான விலை அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.
ரீரா மற்றும் ஜிஎஸ்டி
ரீரா மற்றும் ஜிஎஸ்டி அமலுக்கு வரும் போது வீட்டின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை விலை உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகின்றது.
வெளிப்படையான வரி
வரி என்ன தான் வெளிப்படையாக இருந்தாலும் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு கட்டுமான பணிகளில் உள்ள வீடுகளுக்கு ஜிஎஸ்டி கீழ் 12 சதவீதம் உயரும். இதுவே முன்பு 4.5 சதவீதமாக இருந்தது.
அதனால் ரியல் எஸ்டேட் சந்தையில் வீடுகளின் விலை உயரும் என்பதற்குக் காரணம். கட்டுமானத்திற்குத் தேவைப்படும் ஸ்டீல் பொருட்களின் விலையும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியின் கீழ் வருகின்றது.
சிமெண்ட் விலை முன்பு இருந்தது போலவே ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும் அதனால் இது நேரடியாகவே வீட்டைக் கட்டும் போது பட்ஜெட்டினை அதிகரிக்கும்.
குறைந்தபட்ச ஊதியம்
மத்திய அரசு குறைந்தபட்ச ஊதியத்தில் உள்ள சிக்கல்களைச் சரிசெய்ய முடிவு செய்துள்ளது. அதனால் தற்போது உள்ள சூழல் தான் வீடு வாங்க ஏற்றது.
வீட்டுக் கடன்
வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதமும் குறைவாக உள்ளது அதனால் வீடு வாங்க விரும்புபவர்களுக்கு இது ஏற்றச் சூழல் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட் சந்தை இப்போது குறைந்த விலையில் வீட்டை விற்று வருகின்றன. வீட்டுக் கடன் மீதான வட்டியும் குறைவாக உள்ளது. சேவை வரியும் குறைவாக உள்ளது, அரசும் மானியம் அளிக்கின்றது. இதனைப் பயன்படுத்திக் குறைந்த விலையில் எளிதாக வீடு வாங்கலாம் என்று சிஆர்இடிஎஐ பொதுச்செயலர் கவுரவ் குப்தா தெரிவித்தார்.
ஸ்டீல் சிமெண்ட்
ஸ்டீல் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக உள்ளது, சிமெண்ட் மீதான வரி 28 சதவீதமாக அறிவித்துள்ள நிலையில் இதன் விலை நிலையானது இல்லை என்பதால் விலையில் ஏற்ற இரக்கங்கள் இருக்கும். ஆனால் முன்பு சிமெண்ட் மீது 23 முதல் 24 சதவீதம் வரையில் தான் வரி விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications