சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் போது ரயில் பயணிகளின் ஏசி மற்றும் முதல் வகுப்பு டிக்கெட் கட்டணங்கள் உயருகின்றது.
ரயில் டிக்கெட் மீதான சேவை வரித் தற்போது 4.5 சதவீதமாக உள்ளது, இதுவே ஜிஎஸ்டி அமலுக்கு வரும் போது 5 சதவீதமாக வரி உயர்த்தப்படுகின்றது.
ஏசி மற்றும் முதல் வகுப்பு
ரயில் டிக்கெட் கட்டணங்களில் ஏசி மற்றும் முதல் வகுப்பு டிக்கெட்களுக்கு மட்டும் தான் சேவை வரி உள்ளது. அதனால் டிக்கெட் கட்டணம் 2,000 ரூபாய் என்றால் 2,010 ரூபாயாக அடுத்த மாதம் உயரும் என்று மூத்த ரயில்வே அமைச்சக அதிகாரி தெரிவித்தார்.
ரயில்வே நிர்வாகம்
ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி முறையை அமலுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக ரயில்வே நிர்வாகம் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகாரிகளை நேரடியாக நியமித்துள்ளது.
ஆலோசகர்கள்
ஜிஎஸ்டி வரி அமைப்பை ரயில்வே நிர்வாகத்தில் அறிமுகப்படுத்தும் விதமாகவும், அதில் ஏற்படும் சிக்கலை தீர்க்கும் விதமாகவும் இந்திய ரயில்வே நிர்வாகம் ஆலோசகர்களையும் நியமித்துள்ளது.
பான் எண்
ஜிஎஸ்டிக்குப் பதிவு செய்வது பான் விவரங்கள் அடிப்படையில் என்பதால் ரயில்வே ஏற்னவே பான் எண்ணைப் பெற்றுள்ளது.
முதன்மை அதிகாரிகள்
ரயில்வேயின் ஒவ்வொரு மண்டல பொது மேலாளர்களை ஜிஎஸ்டி இணக்கத்தைக் கவனித்துக்கொள்வதற்கு முதன்மை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐடி மையம்
இரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம், இந்திய இரயில்வேயின் தகவல் தொழில்நுட்பம், சரக்கு மற்றும் பயணிகளைப் போக்குவரத்துக்கு ஏற்றவாறு பொருத்தமான மென்பொருள் மாற்றங்களைச் செய்வதற்கான செயல்முறை நடந்து வருகின்றது.
கணினி மையம்
இரயில்வேயின் பெரிய பரிவர்த்தனைகள் கணினிமயமாக்கப்பட்டிருந்தாலும், சில இடங்களில் இன்னும் ஆஃப்-லைனில் செய்து வருகின்றார்கள். அவற்றைக் கணினி மையமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications