இன்னும் சில நாட்களில் ஜிஎஸ்டி வரி விதிப்பு வர்த்தகச் சந்தையில் அமலாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், வேலைவாய்ப்புச் சந்தையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் மறைமுக வரி விதிப்பு முறை, ஜிஎஸ்டி மூலம் முழுமையாக மாற்றியமைக்கப்படும் காரணத்தால், பெரிய நிறுவனங்களின் வரி கணக்கிடு மற்றும் தணிக்கை பிரிவுகளில் பணியாளர்களின் சேவைத் தாறுமாறாக அதிகரித்துள்ளது.
இதனால் வேலைவாய்ப்புச் சந்தையில் தற்போது வரி மற்றும் டெக்னாலஜி பரிவுகளில் புதிய வேலைவாய்ப்புகள் குவிந்து வருகிறது.
அதிகத் தேவை
தற்போதைய நிலையில் புதிய பணியாளர்களின் எண்ணிக்கை FMGCஇல் அதிகளவில் உள்ளது. இதனைத் தொடர்ந்து நுகர்வோர் சந்தை, பார்மா, ரியல் எஸ்டேட், வங்கியியல் மற்றும் இன்சூரன்ஸ் ஆகிய துறைகளில் அதிகளவிலான பணியிடங்கள் உருவாகியுள்ளது.
வேகம்
ஜிஎஸ்டி வரி இன்னும் சில நாட்களில் அமலாக்கம் செய்யப்பட உள்ள நிலையில் கார்பரேட் நிறுவனங்கள் ஊழியர்களை விரைவாகப் பணியில் அமர்த்த வேண்டுமெனத் திட்டத்துடன் அவர்கள் கேட்கும் சம்பளத்தை எவ்விதமான தடையுமின்றி அளித்து வருகிறது.
கணக்கீடு
வரிக் கணக்காளர்கள் கூறுகையில் இந்தியாவில் சுமார் 90 லட்சம் நிறுவனங்கள் உள்ளது. இதில் பெரிய நிறுவனங்கள் தங்களது கணக்கு மற்றும் கணக்கீட்டை ஜிஎஸ்டிக்கு மாற்ற வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 5 ஊழியர்கள் தேவை. இது மொத்த நிறுவனங்கள் எண்ணிக்கையில் 1 சதவீதம் .
அதேபோல் நடுத்தர நிறுவனங்களுக்கு 1 ஊழியர்கள் தேவை. இதன் மூலம் வரித்துறையில் தற்போது சுமார் 13 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது.
அனுபவம்
இதில் பல இடங்களில் பல பணிகளை இத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்களால் மட்டுமே செய்ய முடியும் நிலையில், இவர்களுக்கு நிர்வாகம் எவ்வளவும் சம்பளம் வேண்டுமென்றாலும் அளிக்கத் தயாராக உள்ளது.
மேலும் இவர்களுக்குச் சந்தையில் கிராக்கியும் தற்போது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
பிற பிரிவினர்
அதேபோல் வழக்கறிஞர்கள், பட்டய கணக்காளர்கள், செலவு கணக்காளர் மற்றும் வரி நிபுணர்கள் ஆகியோரின் எண்ணிக்கையும் தற்போது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
தொழில்நுட்பம்
தொழில்நுட்ப பிரிவில் கணக்கைத் தணிக்கை செய்யவும், புதிய கணக்கிற்கு வர்த்தகத்தை மாற்றவும் தொழில்நுட்ப தேவை அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஐடி துறையிலும் அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
ஐடி துறை
இந்திய ஐடித்துறையில் தற்போது ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்புப் பாதிப்பின் தாக்கம் இதன் மூலம் தணிந்துள்ளது.


Click it and Unblock the Notifications