ஜூலை 1ஆம் தேதி முதல் நாட்டின் மறைமுக வரி முழுமையாக அகற்றப்பட்டு ஜிஎஸ்டி என சருக்கமாக அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு ஜிஎஸ்டி வரியமைப்பில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள் மீது கூடுதலாக 10 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட முடிவு செய்துள்ளது.
மேக் இன் இந்தியா
இதன் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்மார்ட்போன்கள் விலை குறைவானதாகவும், அதிகளவில் விற்பனை ஆக கூடிய ஒன்றாகவும் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் இந்த 10 சதவீதம் இறக்குமதி வரி விதிப்பின் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் வந்து தங்களது உற்பத்த ஆலைகளை அமைக்கும். இதன் மூலம் இந்திய அரசுக்கு கூடுதல் வர்த்தககமும் வருவாயும் கிடைக்கும்.
இந்த வாரம் அறிவிப்பு
ஜிஎஸ்டி வரி விதிப்பில் இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன்களுக்கு பல நன்மைகள் உள்ளதாகவும், விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்ய முடியும் இதன் மூலம் எங்களது வர்த்தகம் பாதிக்கப்படும் என இந்தியாவில் ஸ்மார்ட்போன் தாயரிக்கும் நிறுவனங்கள் நிதியமைச்சகத்திடம் ஆலோசனை நடத்தினர்.
இதற்கான அறிவிப்பு இந்த வாரத்திற்குள் வெளியாகும் என தெரிகிறது.
10 சதவீதம் வரி
தற்போது விதிக்கப்பட்டுள்ள 10 சதவீத இறக்குமதி வரி, இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போனின் தற்போதைய விலையில் எவ்விதமான மாற்றமும் இருக்காது.
ஆனால் இந்த கூடுதல் வரி இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்மார்ட்போன் விற்பனையை அதிகரிக்கும். காரணம் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்மார்ட்போன் குறைவாக இருக்கும்.
ஆப்பிள்
இந்த சலுகையை பயன்படுத்தவே ஆப்பிள் நிறுவனம் தைவான் தயாரிப்பு நிறுவனமான விஸ்ட்ரான் உடன் கூட்டணி வைத்து பெங்களுரில் ஐபோன் எஸ்ஈ தயாரித்து வருகிறது.
ஆனாலும் இந்நிறுவனம் அதிகளவிலான ஸ்மார்ட்போன்களை இறக்குமதி செய்தே இந்தியாவில் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இக்கூடுதல் வரி மூலம் தனது புதிய தயாரிப்புகளை இந்தியாவிலேயே தயாரிக்க ஆப்பிள் முன்வரும் என எதிர்பார்க்கிறது.
தற்போதைய வரி விதிப்புகள்
இந்தியாவில் தற்போது இறக்குமதி செய்யப்படும் முழுமையாக வடிவம் பெற்ற ஸ்மார்ட்போன், பேட்டரி, சார்ஜர் மற்றும் ஹெட்செட் ஆகியவற்றிக்கு 12.5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications